»   »  தாயகம் திரும்பும் தாரகைகள் மலையாளத்திலிருந்து புற்றீசல் போல படையெடுத்து தமிழுக்கு வந்த பல நடிகைகள் மீண்டும் தாய் மண்ணுக்கே திரும்பத்தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தமிழர்களை விட தமிழை வைத்து பிழைக்க வந்தவர்கள் தான் அதிகம். குறிப்பாக நடிகைகளை எடுத்துக்கொண்டால் 99 சதவீதம் பேருக்கு தாய் மொழியாக தமிழ் இருக்காது, தமிழை மென்றும், கொன்றும் தான் அவர்கள் பேசுவார்கள்.கேட்டால் இது கோலிவுட் தமிழ் என்று கூறி எஸ்கேப் ஆகி விடுவார்கள். முன்பு தெலுங்கிலிருந்து ஏகப்பட்ட பேர் தமிழ் சினிமாவுக்கு வந்து குவிந்தார்கள். சமீபத்தில் இந்த டிரண்ட் மாறிகேரளாவிலிருந்து பல சேச்சிகள் வந்து இறங்கினர். கோபிகா, நயன்தாரா, பத்மப்பிரியா, சந்தியா, ஆசின் என இந்தப் பட்டியல்ரொம்ப நீளமானது. வந்தவர்களில் தேறியவர்கள் கோபிகா, ஆசின், நயன்தாரா, சந்தியா, பத்மப்பிரியா ஆகிய கொஞ்சம் சிலர் தான். அவர்களில்இப்போதைக்கு பிசியாக இருப்பது ஆசின் மட்டுமே. மற்ற நடிகைகள் கையில் அவ்வளவாக படம் இல்லை என்கிறது கோலிவுட் தகவல். கோபிகாவுக்கு சுத்தமாக தமிழில் படங்களேஇல்லை.இதனால் மலையாளத்துக்கே மீண்டும் திரும்பி விட்டார். அங்கு ஹீரோயின்களுக்கு பஞ்சம் இருப்பதால் கோபிகாஏகப்பட்ட மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். பத்மப்பிரியாவும் இப்போது ஒரு மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். இவரைத் தவிர ரேணுகா மேனனும்விரைவில் மலையாளத்தில் நடிக்கப் போகிறார். ஆசினைத் தவிர மற்ற நடிகைகளுக்கு பெரிய அளவில் தமிழில் படங்கள் கையில் இல்லாததால், தாய் மொழியில் நடிக்க ஆர்வம்காட்டுகிறார்கள். வீட்டில் சும்மா இருப்பதை விட மலையாளத்தில் நடித்து டப்பை ஏத்திக் கொண்டிருக்கலாம் என்பதுதான்அவர்களது எண்ணம். அதேசமயம், தமிழில் மீண்டும் வாய்ப்புகள் கிடைத்தால் கப்பென்று பிடித்து கபால் என மேலே போய் விட வேண்டும் என்பதும்அவர்களது எண்ணம். அதேபோல தமிழில் வாய்ப்பிழந்த பிற நடிகைகளும் மலையாளத்தின் பக்கம் தற்போது கவனத்தைத் திருப்பியுள்ளனர்.அவர்களில் முக்கியமானவர் ஸ்நேகா. இவர் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க புக் ஆகியுள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால், அந்தப் படத்திற்காக ரூ. 20 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறாராம் சினேகா. மலையாளப்படவுலகில் ஹீரோயின் நடிகை என்றால் அதிகபட்சம் 10 லட்சத்துக்கு மேல் தேறாதாம். ஆனால் எப்படியோ வாதாடி, 20 லட்சம்சம்பளத்தை வாங்கியுள்ளாராம் ஸ்நேகா. டப்பு சேர்க்க தமிழ், டைம் பாஸுக்கு மலையாளம், நல்ல கொள்கை தான்!

தாயகம் திரும்பும் தாரகைகள் மலையாளத்திலிருந்து புற்றீசல் போல படையெடுத்து தமிழுக்கு வந்த பல நடிகைகள் மீண்டும் தாய் மண்ணுக்கே திரும்பத்தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தமிழர்களை விட தமிழை வைத்து பிழைக்க வந்தவர்கள் தான் அதிகம். குறிப்பாக நடிகைகளை எடுத்துக்கொண்டால் 99 சதவீதம் பேருக்கு தாய் மொழியாக தமிழ் இருக்காது, தமிழை மென்றும், கொன்றும் தான் அவர்கள் பேசுவார்கள்.கேட்டால் இது கோலிவுட் தமிழ் என்று கூறி எஸ்கேப் ஆகி விடுவார்கள். முன்பு தெலுங்கிலிருந்து ஏகப்பட்ட பேர் தமிழ் சினிமாவுக்கு வந்து குவிந்தார்கள். சமீபத்தில் இந்த டிரண்ட் மாறிகேரளாவிலிருந்து பல சேச்சிகள் வந்து இறங்கினர். கோபிகா, நயன்தாரா, பத்மப்பிரியா, சந்தியா, ஆசின் என இந்தப் பட்டியல்ரொம்ப நீளமானது. வந்தவர்களில் தேறியவர்கள் கோபிகா, ஆசின், நயன்தாரா, சந்தியா, பத்மப்பிரியா ஆகிய கொஞ்சம் சிலர் தான். அவர்களில்இப்போதைக்கு பிசியாக இருப்பது ஆசின் மட்டுமே. மற்ற நடிகைகள் கையில் அவ்வளவாக படம் இல்லை என்கிறது கோலிவுட் தகவல். கோபிகாவுக்கு சுத்தமாக தமிழில் படங்களேஇல்லை.இதனால் மலையாளத்துக்கே மீண்டும் திரும்பி விட்டார். அங்கு ஹீரோயின்களுக்கு பஞ்சம் இருப்பதால் கோபிகாஏகப்பட்ட மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். பத்மப்பிரியாவும் இப்போது ஒரு மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். இவரைத் தவிர ரேணுகா மேனனும்விரைவில் மலையாளத்தில் நடிக்கப் போகிறார். ஆசினைத் தவிர மற்ற நடிகைகளுக்கு பெரிய அளவில் தமிழில் படங்கள் கையில் இல்லாததால், தாய் மொழியில் நடிக்க ஆர்வம்காட்டுகிறார்கள். வீட்டில் சும்மா இருப்பதை விட மலையாளத்தில் நடித்து டப்பை ஏத்திக் கொண்டிருக்கலாம் என்பதுதான்அவர்களது எண்ணம். அதேசமயம், தமிழில் மீண்டும் வாய்ப்புகள் கிடைத்தால் கப்பென்று பிடித்து கபால் என மேலே போய் விட வேண்டும் என்பதும்அவர்களது எண்ணம். அதேபோல தமிழில் வாய்ப்பிழந்த பிற நடிகைகளும் மலையாளத்தின் பக்கம் தற்போது கவனத்தைத் திருப்பியுள்ளனர்.அவர்களில் முக்கியமானவர் ஸ்நேகா. இவர் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க புக் ஆகியுள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால், அந்தப் படத்திற்காக ரூ. 20 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறாராம் சினேகா. மலையாளப்படவுலகில் ஹீரோயின் நடிகை என்றால் அதிகபட்சம் 10 லட்சத்துக்கு மேல் தேறாதாம். ஆனால் எப்படியோ வாதாடி, 20 லட்சம்சம்பளத்தை வாங்கியுள்ளாராம் ஸ்நேகா. டப்பு சேர்க்க தமிழ், டைம் பாஸுக்கு மலையாளம், நல்ல கொள்கை தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மலையாளத்திலிருந்து புற்றீசல் போல படையெடுத்து தமிழுக்கு வந்த பல நடிகைகள் மீண்டும் தாய் மண்ணுக்கே திரும்பத்தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் தமிழர்களை விட தமிழை வைத்து பிழைக்க வந்தவர்கள் தான் அதிகம். குறிப்பாக நடிகைகளை எடுத்துக்கொண்டால் 99 சதவீதம் பேருக்கு தாய் மொழியாக தமிழ் இருக்காது, தமிழை மென்றும், கொன்றும் தான் அவர்கள் பேசுவார்கள்.கேட்டால் இது கோலிவுட் தமிழ் என்று கூறி எஸ்கேப் ஆகி விடுவார்கள்.

முன்பு தெலுங்கிலிருந்து ஏகப்பட்ட பேர் தமிழ் சினிமாவுக்கு வந்து குவிந்தார்கள். சமீபத்தில் இந்த டிரண்ட் மாறிகேரளாவிலிருந்து பல சேச்சிகள் வந்து இறங்கினர். கோபிகா, நயன்தாரா, பத்மப்பிரியா, சந்தியா, ஆசின் என இந்தப் பட்டியல்ரொம்ப நீளமானது.

வந்தவர்களில் தேறியவர்கள் கோபிகா, ஆசின், நயன்தாரா, சந்தியா, பத்மப்பிரியா ஆகிய கொஞ்சம் சிலர் தான். அவர்களில்இப்போதைக்கு பிசியாக இருப்பது ஆசின் மட்டுமே.

மற்ற நடிகைகள் கையில் அவ்வளவாக படம் இல்லை என்கிறது கோலிவுட் தகவல். கோபிகாவுக்கு சுத்தமாக தமிழில் படங்களேஇல்லை.இதனால் மலையாளத்துக்கே மீண்டும் திரும்பி விட்டார். அங்கு ஹீரோயின்களுக்கு பஞ்சம் இருப்பதால் கோபிகாஏகப்பட்ட மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

பத்மப்பிரியாவும் இப்போது ஒரு மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். இவரைத் தவிர ரேணுகா மேனனும்விரைவில் மலையாளத்தில் நடிக்கப் போகிறார்.

ஆசினைத் தவிர மற்ற நடிகைகளுக்கு பெரிய அளவில் தமிழில் படங்கள் கையில் இல்லாததால், தாய் மொழியில் நடிக்க ஆர்வம்காட்டுகிறார்கள். வீட்டில் சும்மா இருப்பதை விட மலையாளத்தில் நடித்து டப்பை ஏத்திக் கொண்டிருக்கலாம் என்பதுதான்அவர்களது எண்ணம்.

அதேசமயம், தமிழில் மீண்டும் வாய்ப்புகள் கிடைத்தால் கப்பென்று பிடித்து கபால் என மேலே போய் விட வேண்டும் என்பதும்அவர்களது எண்ணம்.

அதேபோல தமிழில் வாய்ப்பிழந்த பிற நடிகைகளும் மலையாளத்தின் பக்கம் தற்போது கவனத்தைத் திருப்பியுள்ளனர்.அவர்களில் முக்கியமானவர் ஸ்நேகா. இவர் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க புக் ஆகியுள்ளார்.

இதில் விசேஷம் என்னவென்றால், அந்தப் படத்திற்காக ரூ. 20 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறாராம் சினேகா. மலையாளப்படவுலகில் ஹீரோயின் நடிகை என்றால் அதிகபட்சம் 10 லட்சத்துக்கு மேல் தேறாதாம். ஆனால் எப்படியோ வாதாடி, 20 லட்சம்சம்பளத்தை வாங்கியுள்ளாராம் ஸ்நேகா.

டப்பு சேர்க்க தமிழ், டைம் பாஸுக்கு மலையாளம், நல்ல கொள்கை தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil