நடிகைகள் இப்போ ரொம்ப உஷார்.. பாதுகாப்பாக முதலீடு செய்வதில் போட்டா போட்டி!
சென்னை: பாதுகாப்பான முதலீடுகளில் கவனமாக உள்ளனர் இந்தக் காலத்து நடிகைகள்.
அந்தக் கால நடிகைகள் எக்கச்சக்கமாக சம்பாதித்தாலும், கடைசி காலத்தில் ஒன்றுமில்லாமல் போய்விட்டார்கள். சரோஜா தேவி, கே ஆர் விஜயா போன்றவர்கள் இதில் விதிவிலக்கு.
இப்போதுள்ள நடிகைகள் எந்தெந்த மாநில மொழிகளில் நடிக்கிறார்களோ, அங்கெல்லாம் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்து வருகிறார்கள்.
நயன்தாரா, த்ரிஷா, அஞ்சலி, அனுஷ்கா, நமீதா என அனைவருமே நன்கு சம்பாதிக்கும்போதே செட்டிலாகிவிடும் தொலைநோக்குடன் சொத்துகளில் முதலீடு செய்து வருகிறார்கள்.

நயன்தாரா
கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா, தான் சேர்த்து வைத்த சொத்துகளை காதலர்களிடம் இருமுறை பறிகொடுத்தவர். இப்போது மீண்டும் தனது வருமானத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். கேரளாவில் நிறைய விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் வாங்கி போட்டுள்ளாராம்.

அனுஷ்கா
அனுஷ்காவும் கோடிகளில்தான் சம்பளம் வாங்குகிறார். சம்பாதித்த பணத்தில் ஆரம்பத்திலிருந்தே ஹைதராபாத்தில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்கிறார் இந்த முன்னாள் யோகா டீச்சர்.

த்ரிஷா
மூன்றாண்டுகளுக்கு முன்பே கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியவர் த்ரிஷா. இப்போது தன் வருமானத்தை ஓட்டல் துறையில் முதலீடு செய்துள்ளார். நிறைய வீடுகளும் வாங்கிப் போட்டுள்ளாராம்.

நமீதா
நமீதாவுக்கும் கட்டுமானத் துறையில்தான் ஆர்வம் அதிகம். ஏற்கெனவே ஆம்பி வேலி, மும்பையில் கட்டுமானத் துறையில் கால்பதித்துள்ள அவர், அடுத்து சென்னையில் வீடுகள் கட்டி விற்கப் போகிறாராம்.

இலியானா
இலியானா ஆந்திராவில் ஷாப்பிங் மால்களில் முதலீடு செய்து வருகிறார். சில ஜவுளி ஷோரூம்களையும் நடத்துகிறார்.

சிம்ரன்
நடிகை சிம்ரன் இப்போது டிவி சீரியல்கள் தயாரிக்கிறார். இந்தத் தலைமுறை நடிகைகளில் சம்பாதித்த பணத்தை மீண்டும் சினிமா தொடர்பான தொழிலிலேயே முதலீடு செய்யும் குஷ்பு, ராதிகா வரிசையில் இவரும் இடம் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











