கொளுத்தும் வெயில்... வெளிநாடு பறக்கும் கோடம்பாக்கப் பறவைகள்
சென்னை: வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொள்ள வெளிநாடு போகப் போறாங்களாம் சில கோலிவுட் அம்மணிகள்...
காய்ஞ்சு கிடக்கும் பூமியில சில நடிகைகளின் குளு குளு படங்களைப் பார்த்துத் தான் இளசுகள் முதல் பெருசுகள் வரை குளிர் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அத்தகைய குளிர்ச்சியான நடிகைகளே 'ஸோ ஹாட்' என பாரீன் செல்கிறார்களாம்.
பல நடிகைகள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டனர். இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கு சூட்டிங்கை மாற்றும்படி நிர்ப்பந்தித்து அங்கே ஓடுகிறார்களாம்
வெயில் கொடுமை குறித்து நடிகைகளின் புலம்பல் இதோ...

ஸ்ருதிஹாசன்:
சென்னையில் வெயில் கடுமையாக உள்ளது. ஐதராபாத்திலும் இதேபோல் வெயில் கொளுத்துகிறது. நல்ல வேளையாக ராம்சரண் ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்துகின்றனர். எனவே வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க நான் சுவிட்சர்லாந்து செல்கிறேன். அங்கு இம்மாதம் இறுதிவரை தங்கி ஓய்வெடுப்பேன். வெயில் குறைந்த பிறகு வருவேன்.

சமந்தா....
வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க நான் ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறேன். அங்கு கோடை விடுமுறையை கழிப்பேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வே இல்லாமல் படங்களில் நடித்தேன். புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாக இருந்தேன். இப்போது ஓய்வு கிடைத்துள்ளது. எனவே ஸ்பெயினுக்கு போகிறேன். கோடையை ஜில் என்று கழிக்க செல்கிறேன். இந்த மாதம் இறுதியில்தான் ஊருக்கு திரும்புவேன். அதன் பிறகு பவன் கல்யாணுடன் தெலுங்கு படத்தில் நடிப்பேன்.

சார்மி...
வெயிலில் இருந்து தப்பிக்க அமெரிக்கா செல்கிறேன் என்றார். அங்கு தெலுங்குகாரர்கள் நடத்தும் பண்டிகையொன்று நடைபெற உள்ளது. அப்பண்டிகையில் பங்கேற்று விட்டு அமெரிக்காவிலேயே கோடை விடுமுறையை கழிப்பேன்.


Click it and Unblock the Notifications











