twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புருஷன், மாமியார் சொல்வதற்காக நடிப்பை நிறுத்தக் கூடாது: ஸ்ருதி

    By Siva
    |

    ஹைதராபாத்: நான் திருமணமாகி தாயான பிறகும் கூட நடிப்பை நிறுத்த மாட்டேன். கணவர், மாமியார், மாமனார் சொல்கிறார்கள் என்பதற்காக நடிகைகள் நடிப்பதை நிறுத்தக் கூடாது என நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

    பாலிவுட், கோலிவுட், டோலிவுட் படங்களில் பிசியாக இருந்து வருகிறார் உலக நாயகனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாஸன். தந்தையின் உதவி இல்லாமல், அவரின் பெயரை பயன்படுத்தாமல் முன்னுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர் ஸ்ருதி.

    இந்நிலையில் நடிப்பு பற்றி ஸ்ருதி கூறுகையில்,

    பக்குவம்

    பக்குவம்

    நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது நான் பக்குவப்பட்டுள்ளேன். சவால்களை சந்திக்க கற்றுக் கொண்டுள்ளேன். வாழ்க்கை தெளிவாகிவிட்டது.

    ஹீரோயின்

    ஹீரோயின்

    ஒரு படம் ஹிட்டானால் உடனே ஹீரோவை மட்டும் புகழ்வதையும், ஹீரோயினை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் பார்க்கிறேன். அதை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. என் கதாபாத்திரத்தை நான் ஒழுங்காக நடித்துக் கொடுத்தேனா என்பதே எனக்கு முக்கியம்.

    கவுதமி

    கவுதமி

    என் தந்தையும், கவுதமியும் பிரிவதற்கு நான் காரணமா என்று தொடர்ந்து கேட்கிறார்கள். என் தந்தையின் தனிப்பட்ட விஷயம் குறித்து நான் எப்பொழுதுமே பேசுவது இல்லை. வளர வளரவே பெற்றோரின் மதிப்பு புரிகிறது.

    திருமணம்

    திருமணம்

    நடக்க வேண்டிய நேரத்தில் எனக்கு திருமணம் நடக்கும். திருமணம் செய்யும் தொழிலுக்கு தடையாக இருக்கக் கூடாது. கணவர், மாமியார், மாமனார் சொல்கிறார்கள் என்பதற்காக நடிகைகள் நடிப்பதை நிறுத்தக் கூடாது.

    சினிமா

    சினிமா

    எனக்கு சினிமா என்றால் மிகவும் பிடிக்கும். நான் திருமணமான பிறகும், ஏன் தாயான பிறகு கூட தொடர்ந்து நடிப்பேன். ஆண்களின் உடல் பலத்தை விட பெண்களின் மனோ பலமே சிறந்தது. ஆண்கள் பெண்கள மதிக்க வேண்டும் என்றார் ஸ்ருதி ஹாஸன்.

    English summary
    Shruti Haasan said that actresses shouldn't quit acting just because their husband and in laws don't like it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X