twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாடும் அளவுக்கு வாய்ஸ் இருக்கு... ஆனா, டப்பிங் பேச மாட்டாங்களாம்!!

    By Shankar
    |

    தமிழ் சினிமாவில் இன்று முன்னணியில் இருக்கும் எந்த நடிகையும் படங்களில் சொந்தக் குரலில் பேசுவதில்லை.

    10 ஆண்டுகளுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவே, முதல் முறையாக இப்போதுதான் சொந்தக் குரலில் டப்பிங் பேசப் போகிறார்.

    மற்றபடி முன்னணி நடிகைகள் - தமிழ் நன்கு தெரிந்தவர்களாகவே இருந்தாலும் - யாரும் டப்பிங் பேசுவதில்லை.

    ஆனால் சொந்தக் குரலில் பாடுவது என்றால் மட்டும் அவ்வளவு நடிகைகளும் தயாராக வந்து நிற்கிறார்கள்.

    இன்றைய நடிகைகளில் பலரும் சொந்தக் குரலில் ஒரு பாட்டாவது பாட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

    ஆன்ட்ரியா

    ஆன்ட்ரியா

    குரல் கொஞ்சம் நடுக்கம் காண்பது போல இருந்தாலும், ஏனோ ஆன்ட்ரியாவை மாய்ந்து மாய்ந்து அழைத்து பாட வைக்கிறார்கள். மேடைகளையும் விட்டுவைப்பதில்லை. முன்பெல்லாம் சொந்தக் குரலில் டப்பிங் பேச மறுத்தவர், இப்போது இறங்கி வந்திருக்கிறாராம்.

    ஹிட் படங்களில்

    ஹிட் படங்களில்

    ‘அந்நியன்' படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா', துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாட்டையும், வணக்கம் சென்னை படத்தில் எங்கடி பொறந்த பாட்டையும் பாடியவர் இந்த ஆன்ட்ரியாதான்.

    ஸ்ருதி ஹாஸன்

    ஸ்ருதி ஹாஸன்

    ஸ்ருதி ஹாசன் ரொம்ப வருடங்களாகப் பாடிக் கொண்டிருக்கிறார். இவர் ஹே ராமில் கமலுடன் சேர்ந்து பாடினார். பின்னர் பல படங்களில் இவரது குரலில் பாடல்கள் வந்திருக்கின்றன. சமீபத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடினார். இன்றைய தேதிக்கு அனைத்து மொழிகளிலும் தன் சொந்தக்குரலில் டப்பிங் பேசுபவர் இவர்தான்.

    ரம்யா நம்பீசன்

    ரம்யா நம்பீசன்

    நடிகை ரம்யா நம்பீசன் பாண்டியநாடு படத்தில் பை பை பாடலை பாடி பாடகியாக அறிமுகமானார். இந்த பாடல் ஹிட்டானதால் மேலும் படங்களில் பாட வாய்ப்புகள் வர, அதையே தொடர்கிறார்.

    லட்சுமி மேனன்

    லட்சுமி மேனன்

    இப்போது லட்சுமி மேனனும் பாடகியாகி இருக்கிறார். கண்ணன் இயக்கத்தில் விமல், ப்ரியாஆனந்த் ஜோடியாக நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் இசையமைப்பாளர் இமான் லட்சுமி மேனனை பாட வைத்துள்ளார். ஆத்தாடி அம்மாடி என துவங்கும் பாடலை அவர் பாடி இருக்கிறார். ஆனால் படங்களில் லட்சுமி மேனனுக்கு இரவல் குரல்தான்.

    சினேகா

    சினேகா

    பார்த்திபன் இயக்கும் கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் படத்துக்காக சினேகாவை அழைத்து வந்து ஒரு பாடலை பதிவு செய்துள்ளனர். இதே சினேகாவுக்கு படங்களில் டப்பிங் வாய்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nowadays, actresses are turning as singers, but they are never lend their voices for dubbing in movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X