இந்த நடிகைகளால் 'தம்'மடிக்காமல் இருக்கவே முடியாது
மும்பை: பாலிவுட் நடிகைகளில் சிலரால் புகைப்பிடிக்காமல் இருக்கவே முடியாது.
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அந்த பாழாய் போன பழக்கத்தை மட்டும் சிலர் விட மறுக்கிறார்கள்.
அப்படி புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பாலிவுட் நடிகைகளை பார்ப்போம்.

சுஷ்மிதா சென்
பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்ற நடிகை சுஷ்மிதா சென்னால் தம்மடிக்காமல் இருக்க முடியாது. இந்த பழக்கதை விட்டுவிட முயற்சித்து வருவதாக கூறி வருகிறார்.

கங்கனா
ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்த இந்தி நடிகை கங்கனா ரனாவத் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்து வருகிறார். நிஜத்தில் அவர் ஒரு நாளைக்கு பல சிகரெட்களை ஊதித் தள்ளுகிறார். மேலும் புகைப்பிடித்தலுக்கு எதிராக தடை விதிப்பதை அவர் எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணி
பாலிவுட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை ராணி முகர்ஜியால் புகைப்பிடிக்காமல் பொழுதை கழிக்க முடியாது. இதனால் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சனை எல்லாம் ஏற்பட்டது.

மனிஷா
மனிஷா கொய்ராலா புற்றுநோயுடன் போராடி வென்றார். அவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமை. தனது திருமண தினத்தில் கூட மணப்பெண் கோலத்தில் தம்மடித்தார்.

கொங்கனா சென்
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் கொங்கனா சென்னால் சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியாது. தான் கர்ப்பமாக இருந்தபோது கூட புகைப்பிடிக்காமல் இருக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











