2012ல் டோலிவுட்டை கலக்கிய காஜல், சமந்தா, ஸ்ருதி, நயன், த்ரிஷா

By Siva

ஹைதராபாத்: நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதி ஹாசன், நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்டோர் கடந்த 2012ல் தெலுங்கு பட உலகை ஒரு கலக்கு கலக்கியுள்ளனர்.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று எந்த உட்டாக இருந்தாலும் எந்த நடிகை அதிகம் ஹிட் கொடுக்கிறாரோ அவரைத் தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். மேலும் ஹிட் கொடுத்தாலும் பந்தா இல்லாமல், பிரச்சனை செய்யாமல் நடித்துக் கொடுப்பவர்களையும் கைவிட மாட்டார்கள். அந்த வகையில் பார்த்தால் டோலிவுட்டின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் காஜல் அகர்வால் தான்.

காஜல் ஹிட் படங்களை கொடுப்பதுடன் ஷூட்டிங்கில் பிரச்சனை செய்யாமல் நடித்துக் கொடுப்பார். ஹீரோ எவ்வளவு லேட்டாக வந்தாலும் தாம் தூம் என்று குதிக்காமல் பொறுமையாக காத்திருந்து நடித்துக் கொடுப்பவர். கடந்த 2012ம் ஆண்டில் காஜல் தவிர சமந்தா, ஸ்ருதி ஹாசன், நயன்தாரா, த்ரிஷா, தமன்னா உள்ளிட்ட நடிகைகளும் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக தோல்வி நடிகை என்ற பெயர் மாறி வெற்றி நடிகையாகியுள்ளார் ஸ்ருதி.

இப்படி 2012ல் டோலிவுட்டை கலக்கு கலக்கிய நடிகைகளைப் பார்ப்போம்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

சமத்துப் பொண்ணு காஜல் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து நடித்த பிசினஸ்மேன் சூப்பர் ஹிட்டானது. அதில் காஜலின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. கடந்த ஆண்டு அவர் நடித்த இன்னொரு படம் சார் ஒச்சாரு அவ்வளவாக ஓடவில்லை.

சமந்தா

சமந்தா

சமந்தா சுதீப் மற்றும் நானியுடன் சேர்ந்து நடித்த ஈகா படம் கண்டமேனிக்கு ஓடியது. அதையடுத்து வெளியான எட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு சுமாராகத் தான் ஓடியது.

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

தெலுங்கில் தோல்விப் படங்களாக இருக்கிறதே என்று நொந்த ஸ்ருதிக்கு பவன் கல்யாணுடன் சேர்ந்து தபாங் ரீமேக்கான கப்பார் சிங்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கப்பார் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்டாகவே ஸ்ருதிக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

தமன்னா

தமன்னா

கடந்த ஆண்டு தமன்னா ரச்சா, எந்துகண்டே பிரேமன்டா, ரெபல், கேமராமேன் கங்காதோ ராம்பாபு ஆகிய 4 படங்களில் நடித்தார். ஆனால் ராம்சரண் தேஜாவுடன் அவர் நடித்த ரச்சா மட்டும் தான் ஹிட்டானது.

இலியானா

இலியானா

இலியானா 2012ல் பாலிவுட்டில் பிசியாக இருந்ததால் டோலிவுட்டில் ஜுலாயி மற்றும் தேவுடு சேசின மனுஷுலு ஆகிய 2 படங்களில் மட்டுமே நடித்தார். அதில் ஜூலாயி படம் மட்டுமே ஹிட்.

த்ரிஷா

த்ரிஷா

தெலுங்கு நடிகர் வெங்கடேஷுடன் சேர்ந்து த்ரிஷா நடித்த பாடிகார்ட் ஓரளவுக்கு ஓடியது. ஜூனியர் என்.டி.ஆர், கார்த்திகா ஆகியோருடன் சேர்ந்து நடித்த தம்மு படம் ஹிட்டானது.

நயன்தாரா

நயன்தாரா

கடந்த ஆண்டு நயன்தாராவின் ஒரேயொரு தெலுங்கு படம் தான் ரிலீஸ் ஆனது. ராணா டக்குபாதியுடன் சேர்ந்து நயன் நடித்த கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் ஹிட்டானது. மேலும் நயன் தனது நடிப்பால் ஆந்திர மக்களை கவர்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X