அப்பா வயது நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்யும் நாயகிகள்

By Mayura Akilan

சினிமாவில் ஹீரோ உடன் ஜோடியாக நடித்த நடிகைகள் சில ஆண்டுகளிலேயே அதே ஹீரோவிற்கு அக்காவாகவோ, அம்மாவாகவோ நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அனால் 70 களில் கதாநாயகர்களாக நடித்த நடிகர்கள் இன்றைக்கும் கதாநாயகர்களாக இளம்நாயகிகளுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கின்றனர்.

எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி இன்றைய ரஜினி கமல் வரை தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளுடன் வயதான நடிகர்கள் நடிப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இதில் பெரும்பாலான நடிகைகள் தங்களின் அப்பா வயதை ஒத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். கோலிவுட் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து பட உலகிலும் இது விதிவிலக்கில்லாமல் இருக்கிறது. இதில் எந்த பொருத்தமானதாக இருக்கிறது. ரசிகர்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்கின்றனர்? யார் விமர்ச்சிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர் – மஞ்சுளா

எம்.ஜி.ஆர் – மஞ்சுளா

50 வயதுக்கு மேல்தான் மக்கள் நாயகனாக, ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் எம்.ஜி.ஆர். இவருடைய கதாநாயகிகளுக்கு 20 வயதிற்குள்தான் இருக்கும். ரிக்சாகாரன் படத்தில் எம்.ஜி.ஆர் ஜோடியாக நடித்த மஞ்சுளாவிற்கு 16 வயது என்கின்றனர்.

சிவாஜி – ஸ்ரீதேவி

சிவாஜி – ஸ்ரீதேவி

அதேபோல நடிகர் திலகம் சிவாஜிக்கு மகளாக நடித்து பின்னர் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. சந்திப்பு படத்தில் சிவாஜியுடன் டூயட் பாடிய ஸ்ரீதேவியை ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்தார்கள்.

ரஜினிகாந்த் - சோனாக்ஷி சின்ஹா

ரஜினிகாந்த் - சோனாக்ஷி சின்ஹா

சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா பாலிவுட் பட உலகில் தன்னை விட 20 வயது மூத்தவரான சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தவர். தமிழில் தன் தந்தை வயதை ஒத்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லிங்கா படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய்

ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய்

எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் - ரஜினி ஜோடி இடையே 30 வயது வித்தியாசம் இருந்தாலும் பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஏனெனில் கதாநாயகி ஐஸ்வர்யாராய்க்கு 35 வயதிற்கு மேலாகிவிட்டதே அதற்கு காரணம் என்கின்றனர் ரசிகர்கள்.

கமல் – ஆன்ட்ரியா – பூஜா

கமல் – ஆன்ட்ரியா – பூஜா

விஸ்வரூபம் திரைப்படத்தில் கமல் ஜோடியாக நடித்திருந்த பூஜாகுமார் வயது 35 என்கின்றனர். ஆனாலும் இளம் வயது பெண்ணாகவே காட்சியளிக்கிறார். அதேபோல ஆன்ட்ரியாவும் தனது தந்தை வயதுடைய கமலின் ஜோடியாகவே நடிக்கிறார்.

சரத்குமார் – ஆன்ட்ரியா

சரத்குமார் – ஆன்ட்ரியா

ஆன்ட்ரியா அறிமுகமே சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில்தான். அதில் இருவருக்கும் இடையே 25 வயது வித்தியாசம் இருக்கும் என்கின்றனர்.

அர்ஜூன் – ஆன்ட்ரியா

அர்ஜூன் – ஆன்ட்ரியா

மங்காத்தாவில் அர்ஜூனுடன் ஜோடி சேர்ந்தவர் ஆன்ட்ரியா. அதில் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் அப்பட்டமாக இருக்கும். அதனால்தானோ என்னவோ அடுத்த படத்தில் அர்ஜூனுடன் ஜோடி சேர்ந்த வந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் ஆன்ட்ரியா.

விஜயகாந்த் – லட்சுமிராய்

விஜயகாந்த் – லட்சுமிராய்

தர்மபுரி திரைப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமிராய். அதேபோல எங்கள் அண்ணா படத்தில் நடித்த நமீதாவிற்கும் விஜயகாந்த் இடையே வயது வித்தியாசம் 25க்கும் மேல் என்கின்றனர்.

இளமை புதுமை

இளமை புதுமை

ஆனால் இன்றைக்கு இளமையான கதைக்கு ஏற்ற கதாநாயகர்களும், அதற்கேற்ற கதாநாயகிகளும் வந்துவிட்டனர். எனவே கல்லூரி போகவும், ஏன் பள்ளியில் படிப்பது போலவும் கூட இப்போது நடிக்க நடிகர்கள் இருப்பதால் தாத்தா வயது கதாநாயகர்கள் நடிகர்கள் பிடியில் இருந்து தமிழ் சினிமா உலகம் தப்பித்து விட்டது என்றே கூறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X