மாலத்தீவில் சில்லிங் செய்யும் பீஸ்ட் நடிகை... அசத்தல் போட்டோஸ்.. கேப்ஷன் அதுக்கு மேல!
சென்னை: பீஸ்ட் பட நடிகையான பூஜா ஹெக்டே மாலத்தீவில் சில்லிங் செய்யும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழில் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தார்.
இருப்பினும் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார் பூஜா ஹெக்டே. இதனால் இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

விஜய்க்கு ஜோடியாக
தற்போது தமிழிலும் கம் பேக் கொடுக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே.

கலக்கல் போட்டோ ஷூட்
இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை பூஜா ஹெக்டே அடிக்கடி கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

மிதக்கும் பிரேக் ஃபாஸ்ட்
இந்நிலையில் தற்போது மாலத்தீவில் ஓய்வை கழித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. இதன்மூலம் இந்த ஆண்டு மாலத்தீவுக்கு சென்ற பிரபலங்களின் பட்டியலில் நடிகை பூஜா ஹெக்டேவும் சேர்ந்துள்ளார். நீச்சல் குளத்தில் குளிக்கும் பூஜா ஹெக்டே நீச்சல் குளத்தில் மிதக்கும் பிரேக் ஃபாஸ்ட்டை சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

அசாதாரண அனுபவங்களைத் தேடி
இதேபோல் நடிகை பூஜா ஹெக்டே மோனோகினி கூலர்ஸ் என கலக்கலாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. அந்த போட்டோக்களுக்கு அசாதாரண அனுபவங்களைத் தேடும் ஒரு சாதாரண பெண் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

மாலத்தீவில் ரிலாக்ஸ்
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஸ்டன்னிங் பிக்சர்ஸ் என கமெண்ட் செய்துள்ளனர். பூஜா ஹெக்டே அடுத்தடுத்து ப்ராஜெக்ட்டுகளில் பிஸியாக உள்ள நடிகை பூஜா ஹெக்டே அடுத்த படத்திற்காக தன்னை தயார்படுத்திக்கொள்ள மாலத்தீவில் ரிலாக்ஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











