இதை விட சின்ன டிரெஸ் கிடைக்கலையா.. கிராப் டாப்பில் அசத்தும் அதா ஷர்மா.. வைரலாகும் போட்டோ!
சென்னை: நடிகை அதா ஷர்மாவின் கிராப் டாப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த லாக்டவுனில் சினிமா ஷூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ஹீரோயின்கள், கவர்ச்சி புகைப்படங்களையும், வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
எப்போதுமே, ரசிகர்கள் தங்களை மறந்து விடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் இவர்கள், பதிவிடும் படுகவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தை கொடுத்து வருகின்றன.

யாருன்னு கண்டுபிடியுங்க
கிராப் டாப் உடையில், தொப்புளை காட்டியபடி படு கவர்ச்சியாக நின்று கொண்டு, தனது முகத்தருகே ஒரு கையை வைத்து மறைத்து, யாருன்னு கண்டுபிடியுங்க என நடிகை அதா ஷர்மா தனது புகைப்படத்தை பதிவிட்டு, டைம் பாஸ் ஆகாமல் ரசிகர்களுடன் விளையாடி வருகிறார்.

விளம்பர ஷூட்டிங்
கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் எல்லாம் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அன்லாக் 2.0 தொடங்கி இருப்பதால், சில இடங்களில் ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைத்துள்ளது. நடிகை அதா ஷர்மா, 20 பேருக்கும் கம்மியான குழுவினர் பங்கேற்ற விளம்பர பட ஷூட்டிங்கில் முழு பாதுகாப்புடன் அண்மையில் நடித்திருந்த தகவலையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கினார்.

செக்ஸி யோகா
சிம்புவின் இது நம்ம ஆளு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அதா ஷர்மா, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கருப்பு நிற உடையில் செம செக்ஸியாக, இரு கைகளை கீழே ஊன்றி, ஒரு காலை அந்தரத்தில் தூக்கியபடி செய்திருந்த யோகா புகைப்படம் ஒட்டுமொத்த இணையத்தையும் சூடேற்றி இருந்தது.

ஜன்னலுக்கு அருகே
கடந்த ஜூலை 1ம் தேதி முதல் இன்று வரை ஜன்னலுக்கு அருகே ஒரே ஆடையில் நின்றபடி வித்தியாச வித்தியாசமான போஸ்களை கொடுத்தும், கேப்ஷன்கள் கொடுத்தும் போட்டோக்களை போட்டு வருகிறார் நடிகை அதா ஷர்மா. பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்த இந்த நடிகைக்கு, இதை விட சின்ன கிராப் டாப் கிடைக்கலையா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











