பாட்டியுடன் பார்ட்டி, பக்காவான ராம்ப் வாக். ஆஹா.. வைரலாகும் பிரபல நடிகையின் த்ரோபேக் வீடியோ!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள த்ரோபேக் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

பாட்டியுடன் பார்ட்டி, பக்காவான ராம்ப் வாக். ஆஹா.. வைரலாகும் பிரபல நடிகையின் த்ரோபேக் வீடியோ!

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

பல்வேறு நாடுகளில் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லாக்டவுன் நீட்டுக்கப்பட்டுள்ளது.

வீடியோ, போட்டோ

வீடியோ, போட்டோ

இருந்தும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது, இந்த உயிர்க்கொள்ளி வைரஸ். இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர். அவர்கள் தினமும் ஏதாவது வீடியோ, போட்டோ என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமர் போட்டோஸ் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருபவர்களில் நடிகை அடா சர்மாவும் ஒருவர். ஜாலியான வீடியோக்களை பதிவிடும் அவரது ஃபன் வீடியோ மற்றும் போட்டோக்களை பார்ப்பதற்காகவே அதிகமான ரசிகர்கள் அவரது இஸ்டாகிராம் பக்கத்துக்கு வருகின்றனர்.

இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

நடிகை அடா சர்மா, தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்துள்ளார். இந்தியில், பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் நடித்துள்ளார். இப்போது, மேன் டு மேன் என்ற இந்திப் படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஜாலி வீடியோ

ஜாலி வீடியோ

இவர் இப்போது தனது பாட்டியுடன் ஆடும் வீடியோவையும் தனது பாட்டி மற்றும் அம்மாவோடு ராம்ப் வாக் செல்லும் ஜாலி வீடியோவையும் வெளியிட்டுள்ளார். த்ரோபேக் வீடியோவாம் இது. பார்ட்டி வித் பாட்டி என்றும் 100 இயர்ஸ் ஆப் அடா சர்மா என்று கிண்டலாக ஹாஷ்டேக் கொடுத்துள்ள அடா சர்மா, 'லாக்டவுன் முடிந்ததும் யாரை எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு இதை டேக் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

நல்லா ஆடறாங்க

நல்லா ஆடறாங்க

'என் லிஸ்டில் என் பாட்டி இருக்கிறார்' என்று கூறியுள்ள அடா சர்மா, அவர்தான் எனக்கு ராம்ப் வாக் கற்றுக்கொடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை அதிகமான நெட்டிசன்கள் லைக் செய்துள்ளனர். தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர். ஒருவர், 'உங்களை விட உங்க பாட்டி நல்லா டான்ஸ் ஆடறாங்க' என்று கூறியுள்ளார்.

இப்படி மாத்திடுச்சே

இப்படி மாத்திடுச்சே

'என்னா ஆட்டம்.. ஐயோ தலைவி வேற லெவல்டா..' என்று கூறியுள்ளனர். சிலர், லாக்டவுன் எல்லோரையும் இப்படி மாத்திடுச்சே' என்றும், சிலர், இந்த வயசுலயும் பாட்டி மிரட்டுறாங்க என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலர், ராம்ப் வாக்குனா, நடந்துல்ல போகணும்.. நீங்க ஏன் ஓடிட்டு இருக்கீங்க? என்று கேட்டுள்ளனர். அதற்கு இன்னொருவர், இது 'ராம்ப் ரன்'பா என்று கமென்ட் அடித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X