வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. அதை உலகம் முழுவதும் பேசறாங்களே.. பிரபல நடிகை மூச்!

By

சென்னை: பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒன்று என நடிகை அடா சர்மா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Reshma Pasupuleti Stunning dance moves, Star Sunita, Preethi sharma | Lock down Diaries

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் இந்த தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இந்நிலையில் லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் இருக்கின்றனர். அவர்கள் தினமும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது பற்றி வீடியோ, மற்றும் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை அடா சர்மாவும், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோஸ் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்

பெண்ணாக மாறி

பெண்ணாக மாறி

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது அடுத்த படத்தில் ஆண் வேடத்தில் நடிக்கிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார். அதாவது மேன் டு மேன் என்ற படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதற்காக இந்த கேரக்டரை தேர்வு செய்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துவரும் இவர், பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்துள்ளார். இப்போது வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். லாக்டவுன் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்குகிறது.

பட வாய்ப்புக்காக

பட வாய்ப்புக்காக

இந்நிலையில், பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் பற்றி மீடு புகார்கள் வெளி வந்து அடங்கிய நிலையில், பல நடிகைகள் இதுபற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை அடா சர்மாவிடமும் இதுபற்றி கேட்கப்பட்டது. இதுபற்றி அவர் கூறும்போது, 'பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது என்பது வட இந்திய, தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒன்று என நினைக்கிறேன்.

உங்கள் முடிவு

உங்கள் முடிவு

இருந்தாலும் அது உங்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு இடத்தில் உட்கார வேண்டுமா? படுத்துக் கொள்ள வேண்டுமா? நிற்கவேண்டுமா அல்லது எதுவும் செய்ய வேண்டாமா? என்பதை நீங்கள்தான் தேர்வு செய்கிறீர்கள். அது உங்கள் முடிவுதான். நீங்கள் தரையில் கூட உட்காரலாம்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X