இப்படியொரு போட்டோ.. இதுக்கொரு கேப்ஷன் வேணுமாங்கும்.. ஹாட் ஹீரோயினை எல்லை மீறி கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: நடிகை அடா சர்மா வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பவர் இந்தி நடிகை அடா சர்மா. பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.
இதை அடுத்து இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் அவர் நடித்திருந்தார்.

பரபரப்பைக் கிளப்புவார்
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் அடா சர்மா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்புவார். ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தாலும் கண்டு கொள்ளமாட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடுமையான கமென்ட்
பெட்டில் பீட்ஸா இருக்க, அதன் அருகில் அடா சர்மா படுத்திருப்பது போன்ற ஹாட் போட்டோவை பதிவிட்டிருந்தார். அதற்கும் ரசிகர்கள் கடுமையான கமென்ட் அடித்திருந்தனர். இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்டுள்ள புகைப்படம் இன்னும் ஹாட்டாக இருக்கிறது. இந்த ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரிய கேப்ஷன்
அந்தப் புகைப்படத்தில், வழக்கமாக புகைப்படங்களுக்கு அருகில் பெரிய பெரிய கேப்ஷன்களைத்தான் எழுதுவேன். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் இப்போது குறைவான வரிகளில் எழுதி இருக்கிறேன் என்று ஜாலியாகக் குறிப்பிட்டுள்ளார். இதை ஏராளமான ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர். சிலர் எல்லை மீறி கலாய்த்துள்ளனர்.
ஒவ்வொருவித அழகு
'இந்த மாதிரி போட்டோவை போட்டுட்டு இதுக்கு கேப்ஷன் வேற வேணுமாங்கும்? என்று ஒரு ரசிகர் கோபமாகக் கூறியுள்ளார். ஒரு ரசிகர், எப்படிங்க ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவித அழகா இருக்கீங்க? என்று கேட்டுள்ளார். நான் இளவரசியை பார்த்ததில்லை. உங்களை பார்க்கிறேன் என்று மற்றொருவர் அதிகமாக வழிந்துள்ளார். 'இந்த போட்டோவால இன்ஸ்டாவுல பயர்ங்க என்று தெரிவித்துள்ளார் ஒருவர்.


Click it and Unblock the Notifications











