இது நிஞ்சா டெக்னிக்கா? பாபா ராம்தேவோட ஃபீமேல் வெர்ஷனா..? ஹீரோயின் வீடியோ கண்டு வியக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: தலைகீழாக நின்றும் நடனம் ஆடியும் நடிகை வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Adah Sharma Ninja Technique | Sruthi Hassan Cooking Recipe | Quarantine Day 2

இந்தியில், பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் நடித்திருப்பவர் அடா சர்மா.

இவர் தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.

ஹாட் போட்டோ

ஹாட் போட்டோ

இதை அடுத்து சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் அவர் நடித்திருந்தார். தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்துள்ளார். இப்போது மேன் டு மேன் என்ற இந்தி படத்தில் நடித்துவருகிறார். இவர், அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்புவார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தலைகீழாக நின்று

தலைகீழாக நின்று

ஓவர் செக்ஸியாக அவர் போஸ் கொடுத்திருந்தார். இதனால் ரசிகர்கள் அவரை கடுமையாக விளாசி இருந்தனர். இந்நிலையில் இப்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடனமாடியபடி வீட்டைச் சுத்தப்படுத்துகிறார். அடாவுக்கு ஜிம்னாஸ்டிக் தெரியும் என்பதால், தலைகீழாக நின்றும் வீட்டுக் கண்ணாடியை அவர் சுத்தம் செய்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் வரவேற்றுள்ளனர். சிலர், 'உங்களுக்கு ரொம்ப காமெடி சென்ஸ்' என்று பதிவிட்டுள்ளனர்.

ரஜினி ரசிகை

சில ரசிகர்களுக்கு அவர் பதில் தெரிவித்துள்ளார். அதில் ஒருவர், ஏன் அடிக்கடி லுங்கி கட்டிக்கிட்டு இருக்கறீங்க? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அடா, நான் ரஜினி ரசிகை அதான்' என்று கூறியுள்ளார். 'எனக்கு உங்க மேல ரொம்ப அன்பு. உங்க வீட்டுல வந்து எல்லாத்தையும் கிளீன் பண்ணவா? என்று ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு, 'நீங்க உங்க வீட்டை முதல்ல சுத்தம் பண்ணி வீடியோ அனுப்புங்க. எங்க வீட்டுல நாங்க பார்த்துப்போம் என்று தெரிவித்துள்ளார்.

நிஞ்சா டெக்னிக்கா?

நிஞ்சா டெக்னிக்கா?

'வீட்டை கிளீன் பண்ற முதல் நடிகைய இப்பதான் பார்க்கிறேன்' என்று ஒருவர் தெரிவிக்க, சிலர், நீங்க கிரியேட்டிவான, வித்தியாசமான நடிகை என்று புகழ்ந்துள்ளனர். ஒரு கலாய் ரசிகர், இது என்ன புது நிஞ்சா டெக்னிக்கா? இல்லைனா, நீங்க பாபா ராம்தேவோட ஃபீமேல் வெர்ஷனா? வேற லெவலால்ல இருக்கு..!' என்று ஆச்சரியப்பட்டுத் தெரிவித்துள்ளார். இன்னொருவர், உங்களுக்கு வர்ற கணவர் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X