'ச்சே.. இந்த லாக்டவுன் அவரை இப்படி ஆக்கிடுச்சே..' ஆம்பளை ஆன ஹீரோயின்.. அட்வைஸில் நெட்டிசன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை மீசையுடன் பதிவிட்டுள்ள கிளாமர் போட்டோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Adah Sharma Ninja Technique | Sruthi Hassan Cooking Recipe | Quarantine Day 2

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் உருவான இந்த தொற்று, உலகம் முழுவதும் பரவிவிட்டது.

இந்த தொற்று காரணமாக, இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும்

நாடு முழுவதும்

அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கும் முடங்கி கிடக்கின்றனர்.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர். அவர்கள் தினமும் ஏதாவது வீடியோ, போட்டோ என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை அடா சர்மா, சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோஸ் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அடா சர்மா

அடா சர்மா

இவர் இந்தியில், பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்துள்ளார். இப்போது மேன் டு மேன் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

மேன் டு மேன்

நடிகை அடா சர்மா, இப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள, போட்டோ வைரலாகி வருகிறது. அதில், எனது அடுத்த படம் மேன் டு மேன். அதில் நான் ஆணாக நடிக்கிறேன். இது அந்தப் படத்தின் ஸ்டில் இல்லை. ஆனால், நான் ஆணாக இருந்தால் எப்படி இருப்பேன்? என்பதைப் பார்க்கத்தான் இந்த போட்டோ.

கிளாமர் போட்டோ

கிளாமர் போட்டோ

ஓகே. நான் இப்ப ரொம்ப பிசி. எனது, இரண்டே இரண்டு யூடியூப் சப்ஸ்கிரைபர்களுடன் சாட் பண்ணப் போகிறேன் என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார். அதில் மூன்று போட்டோகளை பதிவிட்டுள்ளார். மூன்றிலும் மீசையுடன் கிளாமராக இருக்கிறார். இதை லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர்.

சைட் எபெக்ட்டா?

சைட் எபெக்ட்டா?

இதையடுத்து ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். இந்த லாக்டவுன் ஒரு நல்ல நடிகையை இப்படி ஆக்கிடுச்சே என்று சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 'இது குவரைன்டனோட சைட் எபெக்ட்டா?' என்று சிலரும், இந்த லுக்ல நீங்க கபார் சிங் மாதிரி இருக்கீங்க என்று சிலரும் ஐயையோ பயமா இருக்கு?' என்று சிலர் கிண்டலாகக் கூறியுள்ளனர்.

இப்படி ஆக்கிடுச்சே?

இப்படி ஆக்கிடுச்சே?

'நீங்க ஆம்பளையா இருந்தா இன்னும் அழகா இருப்பீங்க.. ஆனா, தாடி வைக்க மறந்துட்டீங்களே?' என்று சிலரும் தெரிவித்துள்ளனர். ஒரு நெட்டிசன், இந்த லாக்டவுன் ஒரு நல்ல நடிகையை இப்படி ஆக்கிடுச்சே? என்று வருத்தமாக கலாய்த்துள்ளார். இன்னொருவர், ஐயையோ பயமா இருக்கு என்றும் எதுக்கு இவ்ளோ கிளாமர் என்றும் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X