அதா ஷர்மா... கோலிவுட்டைக் குறிவைக்கும் தெலுங்கு நாயகி!
சென்டர் ப்ரஷ் விளம்பரத்தில் தனுஷுடன் தோன்றும் மாடல் அழகியை நினைவிருக்கிறதா... அவர் அதா ஷர்மா.
தெலுங்கில் அல்லு அர்ஜூன் மற்றும் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக நடித்துள்ள அவருக்கு, தெலுங்கை விட தமிழ்ப் படங்கள் மீதுதான் ஆர்வம் அதிகமாம்.

சென்டர் ப்ரஷ் விளம்பரத்தில் நடித்த போது தனுஷிடம் வாய்விட்டு கேட்டே விட்டாராம் தமிழ்ப் பட வாய்ப்பு வேண்டுமென்று.
அவரும் 'மைன்ட்ல வச்சிக்கிறேன்' என்று சொல்லியிருப்பதால், மிகுந்த நம்பிக்கையோடு சென்னைக்கு கிளம்பியுள்ளார் அதா ஷர்மா.
நான்கு இந்திப் படங்கள், மூன்று தெலுங்குப் படங்கள் மற்றும் ஒரு கன்னடப் படம் நடித்துள்ள பாலக்காட்டுப் பெண் அதா ஷர்மாவுக்கு, தனுஷ் வாய்ப்பு தரும் முன்பே வேறு ஒரு படமும் கமிட் ஆகியுள்ளதாம்.
Comments


Click it and Unblock the Notifications