»   »  தஞ்சாவூர் அதிசயம்!

தஞ்சாவூர் அதிசயம்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சையிலிருந்து கிளம்பி கோலிவுட் ஹீரோயின்களுடன் குஸ்தி போட கோதாவில் குதித்துள்ளார் அதிசயா.

படு அழகாக இருக்கும் அதிசயா, வட்டாரம் படத்தின் நாயகிகளில் ஒருவர். கவர்ச்சியை நம்பாமல் கதையின்பலத்தை நம்பி நடிக்கப் போவதாக மார் தட்டிக் கூறுகிறார் அதிசயா.இது என்ன விபரீதமான கொள்கை என்று பதறிப் போய் அதிசயாவை கேட்டபோது, சார், ரசிகர்களுக்குகதைதான் முக்கியம். அடுத்துத்தான் கவர்ச்சியைப் பார்ப்பார்கள்.

வெறுமனே கவர்ச்சியை மட்டும் ரசிக்க மாட்டார்கள் என்று விளக்கினார் அதிசயா.இந்த அதிசய நாயகிக்கு சொந்த ஊர் தஞ்சாவூராம். சினிமா ஆசையை தனக்குள் சின்ன வயசிலிருந்தே வளர்த்துக்கொண்ட அதிசயா, மிஸ் மெட்ராஸ் போட்டியில் கலந்து கொண்டவராம்.

அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்கள், இயக்குநர் சரண் பார்வையில் பட அதிசயாவை தனது வட்டாரம் படத்தில்ஒரு நாயகியாக்கி விட்டார். அதிசயாவின் இயற்பெயர் வசுந்தரவாம். இதுவே நல்லாருக்கே அப்புறம் எதுக்குஅதிசயா என்று பெயர்க் காரணம் கேட்டபோது, இயக்குநர் தான் பெயரை மாற்றி விட்டார் என்று மூக்கைஉறிஞ்சினார்.

அதிசயாவுக்கு வட்டாரத்தில் கெட்ட வேடமாம். அதாவது படு சுறுசுறுப்பான, சுட்டிப் பொண்ணாக வருகிறாராம்.படம் முழுக்க குறும்புத்தனத்தை கொப்பளிக்கும் அட்டகாசமான கேரக்டராம். அனுபவித்து நடித்தாராம்.

வட்டாரத்தில் நான் 2வது ஹீரோயின் தான். இருந்தாலும் இதற்காக வருந்தவில்லை. முதலில் நல்ல என்ட்ரிகிடைக்க வேண்டும். அதனால் தான் 2வது ஹீரோயின் என்ற போதும் கவலைப்படவில்லை. ஆனால் அடுத்தபடத்திலிருந்து நான் சோலோ ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என்கிறார் அதிசயா.

படத்தின் நாயகியான மும்பை பாதாம்கீர், கீரத் கிளாமர் சைடில் பின்னி எடுத்திருக்கிறாராம். ஆனால் அதிசயாநேர் மாறான ரோலில் நடித்துள்ளாராம். இருவரையும் சரிவிகித சமானத்தில் கலந்து கலக்கலாககொடுத்துள்ளாராம் சரண்.

அதிசயாவுக்கு கிளாமர் பண்ண விருப்பமில்லையாம். நல்ல கதையாக இருந்தால் பண்ணுவேன். கிளாமர்செய்துதான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்று படு தைரியமாக கூறுகிறார் அதிசயா.

இந்த தஞ்சை அதிசயத்திற்கு ஹார்மோனியம் வாசிக்கத் தெரியுமாம், நல்லா பாடவும் செய்வாராம்.

சரியான சகலகலா வல்லிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil