அசிங்கம்.. உங்களுக்கு எல்லாம் அம்மா, அக்கா, தங்கச்சி இருக்காங்களான்னே தெரியல.. அதிதி பாலன் ஆவேசம்!
சென்னை: அருவி படத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்த அதிதி பாலன் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக மாறி நடித்து வருகிறார். இந்த ஆண்டு வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நானி, பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான சரிபோதா சனி வாரம் படத்தில் நானியின் அக்காவாக நடித்திருந்தார்.
33 வயதாகும் அதிதி பாலன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த அதிதி பாலன் கடந்த 2017ம் ஆண்டு அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

7 கிலோ எடை குறைத்து: அருவி படத்துக்காக 7 கிலோ வரை எடை குறைத்து நடித்தேன். அந்த கிளைமேக்ஸ் காட்சியில் கேமராமேன் கேமராவை செட் செய்து விட்டு சென்று விட்டார். இயக்குநரும் நானும் ஒரு குடிசை வீட்டில் இருந்து அந்தக் காட்சியை படமாக்கினோம். சிங்கிள் டேக்கில் நடித்து முடித்தேன். ஆனால், அந்த படத்தில் நடிக்கும் போது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. படத்தின் ரிசல்ட் பார்த்த போது கஷ்டப்பட்டால் தான் வெற்றிக் கிடைக்கும் என்பதை புரிந்துக் கொண்டேன் என்றார்.
அம்மா, அக்கா, தங்கச்சி இல்லையா?: நடிகைகளின் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் லைக் போட்டு விட்டு அதற்கு கீழ் ஆபாசமாக கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தெரிந்துக் கொள்வதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகின்றனர். போட்டோக்களை இடுப்பு பகுதி, க்ளியவேஜ் தெரிந்தால் அதையெல்லாம் ஜூம் செய்து மோசமான சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அவங்களுக்கு எல்லாம் அம்மா, அக்கா, தங்கச்சின்னு யாருமே இருப்பார்களா? மாட்டார்களா? என்கிற கேள்வி எல்லாம் எனக்கு எழும்.
பிறப்பதே அங்கே தானே?: பெண்களின் பிறப்புறுப்பில் தானே பிறக்குறாங்க அந்த இடத்தையே அசிங்கமா பேசவும், சித்தரித்து பார்க்கவும் எப்படி மனசு வருகிறது. மனநிலை சரியாக உள்ளார்களா? அல்லது லூசான்னு கூட தெரியவில்லை. நடிகைகள் என்றாலே தப்பா கமெண்ட் போடுவது, அசிங்கமா பார்ப்பது என மோசமாகி விடுகின்றனர். இவர்கள் எல்லாம் பெண்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள் என ஆவேசமாகி பேசியுள்ளார் அதிதி பாலன்.
ஓவியா பற்றி மோசமாக: நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ என்கிற பெயரில் வலம் வரும் வீடியோவை காண ஏகப்பட்ட ரசிகர்கள் DM பண்ணுங்க என இந்தியளவில் அந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ஓவியாவை ஆபாசமாக சித்தரித்து திட்டியதும் ஓவியாவின் ரியாக்ஷனையும் அசிங்கமாக பேசி வரும் சூழலில் அதிதி பாலன் பேசியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











