இயக்குனர் தனுஷிடம் என்ன சிறப்பு?: சொல்கிறார் அதிதி

By Siva

சென்னை: தனுஷின் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.

மணிரத்னத்தின் காற்று வெளியிடை படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் பாலிவுட் நடிகையான அதிதி ராவ் ஹைதரி. அதன் பிறகு அவர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் நடித்த செக்கச் சிவந்த வானம் நேற்று வெளியானது.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிதி.

அதிதி

அதிதி

ப. பாண்டி படத்தை அடுத்து புதிதாக ஒரு படத்தை இயக்கி வருகிறார் தனுஷ் இந்த படத்தில் நாகர்ஜுனா, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைதரி, அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனால் நான் ருத்ரன் என்ற தலைப்பை தனுஷ் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர்

நடிகர்

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி நடிக்கிறார். இது குறித்து அதிதி கூறியிருப்பதாவது, நான் ஏற்கனவே ஒரு படத்தில் தனுஷுடன் நடிப்பதாக இருந்தது. ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் அது முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது பெரிய படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் அதிதி.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தனுஷ் ஒரு நல்ல நடிகர். அவருக்கு நடிகர்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் சிறப்பான இயக்குனராக உள்ளார். தனுஷ் இயக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் எடுக்கப்படுகிறது. எனக்கு இரண்டு மொழிகளுமே அவ்வளவாக பேச வராது. அது தான் எனக்கு முன்பு இருக்கும் சவால் என்று அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் டி

மிஸ்டர் டி

தனுஷ் படத்தின் படப்பிடிப்பு ஒரு கிராமத்தில் நடந்து வருகிறது. ப. பாண்டியை போன்றே இந்த படத்திலும் அழகிய கிராமத்து காதல் கதையை எதிர்பார்க்கலாம் போன்று. ப. பாண்டி தனுஷ் இயக்கிய முதல் படம் என்று கூற முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. முதல் படமே அப்படி என்றால் இரண்டாவது படத்தை சொல்லவா வேண்டும். 'மிஸ்டர் டி' நிச்சயம் தெறிக்கவிடுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X