அதிதி ராவுக்கு வீட்டில் நடந்த கொடுமை.. வைரலாகும் வீடியோ !

மும்பை : கொள்ளைகொள்ளும் அழகால் நம் அனைவரையும் கொள்ளை அடித்து வரும் நடிகை அதிதி ராவ் இந்தியாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.

மலையாளத்தில் சமீபத்தில் இவர் நடித்து OTT யில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரும் அதிர்ச்சி தரும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவரின் வீட்டுக்குள் ஒருவர் இவருடைய கால்களை பிடித்து தரதரவென இழுத்துப் போகும் அந்த வீடியோ பார்ப்போர் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.

கதாநாயகிகளாக நம்முன்

கதாநாயகிகளாக நம்முன்

சிலசமயங்களில் வானத்திலிருந்து வந்த தேவதைகள் போன்று சில கதாநாயகிகளாக நம்முன் தோன்றுவது உண்டு. அந்த மாதிரி அதிதி ராவ் தன்னுடைய கொள்ளை அழகால் ரசிகர்களின் மனதை தான் நடிக்கும் திரைப்படங்களின் மூலம் கொள்ளையடித்து வருகிறார்.

தேசிய விருது

தேசிய விருது

இவ்வாறு கொள்ளை அழகை தன்னுள் கொட்டி வைத்திருக்கும் அதிதி ராவ் அறிமுகமான முதல் படத்திலேயே மெகா ஸ்டார் மம்முட்டியுடன் பிரஜாபதி என்ற படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். தமிழில் முதல்முறையாக கதாநாயகியாக சிருங்காரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்நிலையில் இந்த படம் மூன்று தேசிய விருதுகளையும் மற்றும் தமிழ்நாடு விருது உட்பட பல விருதுகளையும் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வெற்றி நாயகி

வெற்றி நாயகி

தமிழில் அறிமுகமான முதல் படமே பல விருதுகளை தட்டிச் சென்று இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்த நிலையில் ஹிந்தியிலும் தனது கொடியை நாட்டி வந்தார். ஏ சாலி ஜிந்தகி மற்றும் ராக் ஸ்டார் போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய அதிதி இந்த இரண்டு படங்களுக்கும் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று ஹிந்தி திரைப்படத்துறையிலும் வெற்றி நாயகி என முத்திரை பதித்து பல ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.

காற்று வெளியிடை

காற்று வெளியிடை

இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த அதிதி தற்பொழுது மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்

இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம், பத்மாவதி, சைக்கோ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீசை மிரட்டி வந்த நிலையில் இப்போது இவர் தமிழில் ஹே சனாமிகா மற்றும் விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இதில் துக்ளக் தர்பார் படத்தின் மிரட்டும் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு கால்களையும்

இரண்டு கால்களையும்

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் ரசிக்கும்படி பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வரும் நிலையில் தற்போது அனைவரும் கதிகலங்கும் வகையில் வீடியோ ஒன்றே பதிவிட்டுள்ளார். அதில் ஒருவர் இவரின் இரண்டு கால்களையும் பிடித்து தரதரவென இழுத்துச் செல்வதை பார்க்கும் அனைவரையும் கதிகலங்க செய்கிறது.

புதிய அப்டேட்டை

புதிய அப்டேட்டை

இன்ஸ்டாகிராம் செயலி இப்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரீல் என்ற புதிய அப்டேட்டை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில் பிங்க் கலர் டாப் மற்றும் கருப்பு கலர் பேண்ட் அணிந்த அதிதி ராவ் சிரித்துக் கொண்டே தரையில் படுத்து கொண்டிருக்க யாரோ ஒருவர் வீட்டிற்குள்ளே அவரின் கால்களை பிடித்து தரதரவென இழுத்துச் செல்வது பார்க்க ரசிக்கும் வகையிலும், அதே சமயம் கொஞ்சம் கதிகலங்கும் வகையிலும் இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பதிவிட்ட அதிதி ராவ் இந்த வீடியோவில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை என காமெடியுடன் ஒரு கேப்ஷனையும் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X