சைக்கோ சூட்டிங்கில் அழுதேன்.. அதிதி ராவ்!

Recommended Video

Psycho - Sneak Peek | udhayanidhi Stalin | Mysskin | Nithya Menon | Aditi Rao

சென்னை : சைக்கோ பட சூட்டிங்கில் பல காட்சிகளில் அழுது விட்டேன் என்று அதிதி ராவ் கூறியுள்ளார்.

தமிழில் காற்று வெளியிடை மற்றும் செக்க சிவந்த வானம் படங்களுக்கு பின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த நடிகை அதிதி. தற்போது மிஸ்கினின் சைக்கோ படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது .

 Aditi Rao said I was crying during the psycho shooting

மிஸ்கின் எப்போதும் தனது படங்களில் சிறந்த நடிகர்களை தேர்ந்தெடுப்பார் மற்றும் அவர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்கிவிடுவார் நமக்கும் திரையில் அதனை பார்க்க மிக ஆச்சரியத்துடன் இருக்கும். அப்படி சைக்கோ படத்தில் நடிக்கும் போது மிக சரியான அளவில் அதிதியின் நடிப்பை வெளிகொண்டு வர முயற்சி செய்து இருக்கிறார் மிஸ்கின். அப்போது படப்பிடிப்பின் போது பல காட்சிகளில் நடிக்க முடியாமல் ,கடினப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் அழுதே விட்டாராம் அதிதி.

மிஸ்கினிடம் எப்போதும் ஒரு இருட்டு இருக்கும் அவர் படங்களின் காட்சிகள் எப்போதும் இருள் சூழ்ந்து இருக்கும். அவர் படங்களில் வைக்கப்படும் ஷாட்கள் அனைத்தும் கட்டாயம் மற்ற படங்களில் இருந்து வேறுபடும். அவருடன் பணியாற்றும் போது அவர் படப்பிடிப்பு ஷாட்கள் புரியாமல் பல நாட்கள் குழம்பி போய்விட்டார் அதிதி அதன் பின் அதை புரிந்து படத்தில் நடித்து பல அனுபவங்களை சைக்கோ படத்தில் இருந்து பெற்றிருக்கிறார்.

 Aditi Rao said I was crying during the psycho shooting

அதிதி தமிழ் மலையாளம் படங்களை விட அதிகம் ஹிந்தி படங்களில் நடித்து இருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்து பெரிய வெற்றி பெற்ற படமான சஞ்சை லீலா பன்ஞாலியின் பத்மாவத் படப்பிடிப்பின் போது ரன்வீர் அதிதி மீது கோவப்படும் காட்சி படமாக்கப்பட்டது அப்போது ரன்வீர், எப்படி நான் அதிதி மேல் கோவப்படுவேன் அதிதியை பார்க்கவே சின்னகுழந்தை போல இருக்கிறாள் நான் எப்படி கோவப்படுவேன் என்று ரன்வீர் சிங் கூறினார் என சமீபத்தில் அதிதி கூறியிருந்தார்.

மணிரத்னம் படம் மூலம் தான் தமிழில் பிரபலமடைந்தார் அதிதி. அவர் சமீபத்தில் கூறும்போது மணிரத்னம் அவரின் படத்தில் நடிக்கும் போது நான் நடித்த முதல் காட்சியே மிக கடினமான காட்சியாக தான் கொடுத்தார். மணி சார் எப்பவும் அப்படி தான் கடினத்தை கொடுத்து. அதற்கு நாம் எப்படி நடிக்கிறோம் என்பதை பார்த்து அதற்கு ஏற்றார் போல படப்பிடிப்பில் காட்சிகளை கொடுப்பார் என்று கூறினார் .

 Aditi Rao said I was crying during the psycho shooting

அதிதி அடுத்தாக தென்னிந்திய மொழிகளில் முக்கிய படங்களில் நடித்து வருகிறார் அதில் முக்கியமாக தமிழில் விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் பார்த்திபனும் நடிக்கிறார். இதனையடுத்து மீண்டும் தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார் என்று சில தகவல்கள் கூறுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X