இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே.. ஷங்கருக்குப் போட்டியாக குதிக்கும் அதிதி ஷங்கர், அஞ்சலி.. என்ன ஆகுமோ?
சென்னை: இந்த பொங்கலுக்கு ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படம் வெளியாகிறது. இந்நிலையில், ஷங்கர் படத்துக்குப் போட்டியாக அவரது மகள் அதிதி ஷங்கர் படமும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ள நடிகை அஞ்சலி படமும் திரைக்கு வருகிறது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அஞ்சலி 10 வருடம் முன்பாக படங்களில் எப்படி நடித்து வந்தாரோ தற்போதும் அதே போலவே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகவே அஞ்சலி நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஆனால், ஷங்கர் படத்துக்குப் போட்டியாக அவர் நடித்த படமே ரிலீஸ் ஆகும் என்பதை அவரே கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்கின்றனர். அதே போலத்தான் அப்பாவுக்கு போட்டியாக இந்த பொங்கல் பண்டிகைக்கு மகள் அதிதி ஷங்கரும் களத்தில் குதித்து இருக்கிறார்.
அதிதி ஷங்கர் படம் ரிலீஸ்: விருமன் படத்தின் மூலம் கார்த்திக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். மருத்துவம் படித்தாலும் சினிமா மீதான ஆர்வம் காரணமாக நடிகையாக மாறிய அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி அறிமுகமாகும் நேசிப்பாயா படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் அதிதி ஷங்கர் தான் ஹீரோயின். காதலர் தினத்தை முன்னிட்டு அதர்வா முரளியின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கேம் சேஞ்சர் படத்துக்கு போட்டியாக இந்த மாதமே வெளியாகிறது.

ஷங்கருடன் மோதும் அஞ்சலி: ஹீரோயின் மார்க்கெட்டை இழந்துவிட்ட அஞ்சலிக்கு கேம் சேஞ்சர் படத்தில் மீண்டும் பெரிய வாய்ப்பை ஷங்கர் கொடுத்திருக்கிறார். அப்பா ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள நிலையில், இந்த பொங்கலுக்கு விஷால், வரலட்சுமி சரத்குமாருடன் அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த மத கஜ ராஜா படம் ரிலீஸ் ஆகிறது. விடாமுயற்சி விலகிய நிலையில், 10 படங்கள் கேம் சேஞ்சர் படத்திற்கு எதிராக களமிறங்க முடிவு செய்துள்ளன.



Click it and Unblock the Notifications











