பச்சை, சிவப்பு பாவாடை தாவணியில் அதிதி ஷங்கர்.. வரலட்சுமி விரதம் செலிபிரேஷனா.. அழகூரில் பூத்தவளே!

சென்னை: இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் விரைவில் வீட்டில் அக்காவுக்கு போட்டியாக நடிக்க வரும் நிலையில், தனது அழகால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் அதிதி ஷங்கர். வரலட்சுமி விரதம் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், நடிகை விஜயலக்‌ஷ்மி, இயக்குநர் ஹரியின் மனைவி ப்ரீத்தா உள்ளிட்ட பலர் வரலட்சுமி விரதம் கொண்டாடிய போட்டோக்களை ஷேர் செய்திருந்தனர்.

இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரலட்சுமி தினத்தில் லட்சுமியாக மாறி நிற்கிறேன் என பதிவிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. சோஷியல் மீடியாவில் அதிதி ஷங்கர் போஸ்ட் போட்டாலே ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Aditi Shankar celebrates Varalakshmi Viradham in half saree photos and video goes viral
Photo Credit:

இந்த ஆண்டு அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கிய நிலையிலும், அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

பச்சை சிவப்பு பாவாடையில்: இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் டாக்டருக்கு படித்து விட்டு ஆக்டராக மாறியுள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி, சாய் பல்லவி என பலர் மருத்துவம் படித்துவிட்டு நடிகைகளாக வலம் வருகின்றனர். விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மாவீரன், ஆகாஷ் முரளியுடன் இணைந்து நேசிப்பாயா உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், அடுத்ததாக அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து நடித்துள்ள ஒன்ஸ்மோர் படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பச்சை மற்றும் சிவப்பு நிற பாவாடை தாவணியை அணிந்துக் கொண்டு செம க்யூட்டாக எடுத்த புகைப்படங்களை வெள்யிட்டுள்ளார்.

அழகூரில் பூத்தவளே: அதிதி ஷங்கரின் அழகை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் திருமலை படத்தில் வரும் "அழகூரில் பூத்தவளே" பாடல் வரிகளை கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர். வாவ் என்றும் சோ க்யூட் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் அதிதி ஷங்கர் அவ்வப்போது இப்படி போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X