அப்பாவை போலவே அந்தப் பக்கம் சென்ற அதிதி ஷங்கர்.. அப்படியே முதல் படத்தில் பார்த்த மாதிரியே இருக்காரே!

ஹைதராபாத்: இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில், விவாகரத்து செய்து இரண்டாவது திருமணத்தையும் நடத்தி முடித்து விட்டார். இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் டாக்டருக்கு படித்த நிலையில், சினிமாவில் நடிகையாகத் தான் போகிறேன் என கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

தமிழ் சினிமாவை தாண்டி இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் தற்போது ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில், அப்பாவை போலவே தெலுங்கு பக்கம் ஒதுங்கியிருக்கிறார் நடிகை அதிதி ஷங்கர்.

aditi shankar tollywood heroine

அங்கே அவர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள பைரவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு டோலிவுட் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.

ஷங்கர் மகள்: தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய பட்ஜெட்டில் படமெடுத்து சொதப்பி வரும் ஷங்கர் இந்த ஆண்டு இந்தியன் 2 படத்தின் மூலம் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் டீசரை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் விருமன் படத்தில் அறிமுகமான நிலையில், தொடர்ந்து இளம் நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

சூர்யா தம்பி முதல் அதர்வா தம்பி வரை: நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தியின் விருமன் படத்தில் அறிமுகமான அதிதி ஷங்கர் அந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மாவீரன் படத்தில் நடித்தார். அர்ஜுன் தாஸ் உடன் ஒன்ஸ் மோர் படத்தில் நடித்துள்ள அதிதி ஷங்கர் அதர்வா தம்பி ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நேசிப்பாயா படத்திலும் காதல் பறவையாகவே நடித்து கலக்கியுள்ளார்.

டோலிவுட்டில் அறிமுகம்: தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அதிதி ஷங்கர் அடுத்ததாக தனது அப்பா ஷங்கரை போல டோலிவுட் பக்கம் சென்றுள்ளார். இயக்குநர் விஜய் கனகமேடலா இயக்கத்தில் பெல்லம் கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் நடிப்பில் உருவாகி வரும் பைரவம் படத்தில் அதிதி ஷங்கர் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதன் அறிவிப்பு போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார். விருமன் படத்தில் எப்படி கிராமத்துப் பெண்ணாக இருப்பாரோ அதே போல இந்த படத்திலும் அவர் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X