Aditi Shankar: கை வைக்காத ஜாக்கெட்டில் கலக்கல் போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்.. சொக்கிப் போன சக நடிகைகள்!

சென்னை: இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கை வைக்காத ஜாக்கெட்டில் கலக்கல் போஸ் கொடுத்து ரசிகர்களை மட்டுமின்றி சில இளம் நடிகைகளின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

மருத்துவ படிப்பை முடித்து விட்டு டாக்டர் ஆகாமல் ஆக்டர் ஆகி உள்ளார் அதிதி ஷங்கர். கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கடந்த ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்துள்ள அதிதி ஷங்கர் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

Aditi Shankar glamour blouse design photos grabs Aishwarya lekshmi and Krithi Shetty attention

அழகு சிலை அதிதி ஷங்கர்: பிரம்மாண்ட இயக்குநர் என இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஷங்கரின் இளைய மகள் தான் அதிதி ஷங்கர். இந்தியன் 2, கேம் சேஞ்சர் என அப்பா பிசியாக இருக்கும் நிலையி, ஹீரோயினாக அதிதி ஷங்கரும் மாச் காட்டி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அதிதி ஷங்கர் அவ்வப்போது க்யூட்டாகவும் கொஞ்சம் ஹாட்டாகவும் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ் வித்து வருகிறார்.

கை வைக்காத ஜாக்கெட்: ஆரம்பத்தில் சுடிதார் அணிந்தும், ஹோம்லியாக சேலை அணிந்தும் போஸ் கொடுத்து வந்த அதிதி ஷங்கர் கொஞ்சம் கொஞ்சமாக மாடர்னாகவும் கவர்ச்சி தூக்கலாகவும் போஸ் கொடுத்து கிக்கேற்றி வருகிறார்.

Aditi Shankar glamour blouse design photos grabs Aishwarya lekshmi and Krithi Shetty attention

நீல நிற பட்டுச் சேலையில் அழகு சிலையாக அணிவகுத்து நிற்கும் அதிதி ஷங்கர் கை வைக்காத ஜாக்கெட்டை அணிந்துக் கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து பசங்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

மின்னுவதில் சில பொன்னும் இருக்கு: மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற பழமொழியை சற்றே மாற்றி மின்னுவதில் சில பொன்னும் இருக்கு என்கிற அர்த்தம் வரும் "Some that glitter ARE gold" என்கிற சூப்பர் கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

மேலும், நகைக்கடை விளம்பரத்துக்கு போட்டோஷூட் நடத்துவது போல உடல் முழுக்க தங்க நகைகளை அணிந்து கொண்டு இந்த போட்டோஷூட்டை நடத்தி இருக்கிறார் அதிதி ஷங்கர்.

Aditi Shankar glamour blouse design photos grabs Aishwarya lekshmi and Krithi Shetty attention

விளம்பரங்களிலும் பிஸி: சிவகார்த்திகேயன் உடன் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ள அதிதி ஷங்கர் அடுத்ததாக அதர்வாவின் தம்பியுடன் ஒரு படத்திலும் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் சென்னை சில்க்ஸ் விளம்பரத்திலும் செம ஆட்டம் போட்டு நடித்து இருந்தார் அதிதி ஷங்கர்.

க்ரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி கமெண்ட்ஸ்: அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த சக நடிகைகளான க்ரித்தி ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போட்டுள்ள கமெண்ட்டுகளும் ரசிகர்களின் பார்வைகளை கவர்ந்துள்ளன.

நடிகை க்ரித்தி ஷெட்டி so pretty என கமெண்ட் போட ஐஸ்வர்யா லக்‌ஷ்மி சுந்தரி என வர்ணித்துள்ளார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விருமன் படத்தில் அதிதி ஷங்கருடன் இணைந்து நடித்த நிலையில், அழகி என கமெண்ட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X