ஒரு சுழட்டல் தான்.. அதிதி ஷங்கரால் கிறங்கி தவிக்கும் இணையம்... வைரல் வீடியோ!
சென்னை: அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
Recommended Video
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ, 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

ராம்சரணுடன் ஷங்கர்
பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கர் தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் ராம்சரணை வைத்த ஒரு படமும் இயக்கி வருகிறார். மேலும் பாலிவுட்டில் அந்நியன் படத்தையும் ரீமேக் செய்யவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

இரண்டாவது மகள் ஹீரோயின்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தார் இயக்குநர் ஷங்கர் இந்நிலையில் தனது இரண்டாவது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக
முத்தையா இயக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் அதிதி ஷங்கர். இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது. இதில் வீரமான பெண்ணாக அதிதி ஷங்கர் நடிப்பதாக கூறப்படுகிறது.

அதிதி போட்டோக்கள் வைரல்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அதிதி அடிக்கடி தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் ஏற்கனவே ஷேர் செய்த போட்டோக்கள் பெரும் வைரலானது. லைக்ஸ்களையும் குவித்தது.

சிங்கள மொழி பாடலுக்கு..
இந்நிலையில் அதிதி ஷங்கர் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் குனிந்தப்படி முடியை ஒரு சுழற்று சுழற்றி விடுகிறார் அதிதி. சிங்கள மொழி பாடலுக்கு ஏற்ப அதிதி ஷேர் செய்துள்ள இந்த வீடியோ இணையத்தை திணறிடித்து வருகிறது.

ஆர்மி ஆரம்பிச்சுடலாம்
அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், தென்மாவட்ட தேவதை என ஜொள்ளு விட்டு வருகின்றனர். அதிதி ஷங்கரின் வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், எப்படியும் பியூட்சர்ல ஒரு பெரிய ஸ்டார் ஆயிடுவீங்க.. அப்போலாம் என் கமெண்ட்ஸ் உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்ல அதனால் ஃபிரிண்ட் ரிக்வெஸ்ட்ல ஆட் பண்ணிடுங்க.. இல்லன்னா ரிப்ளை கொடுங்க.. உங்க பேர்ல ஆர்மி ஆரம்பிச்சிடலாம் என பதிவிட்டுள்ளார்.

தேவதை ஆனது தெரியாமல்
மற்றொரு நெட்டிசனான இவர் ஒரு அழகி பிறந்து வளர்ந்து.. தேவதை ஆனது தெரியாமல் இருந்துள்ளேன்.. என கமெண்ட் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











