அடக்கிட்டு இருக்கேன்.. ஹீரோவை விட்டுட்டு சிவகார்த்திகேயன் பக்கத்துல வந்து உட்கார்ந்த அதிதி ஷங்கர்!
சென்னை: பொதுவாக பட விழாக்களில் ஹீரோக்கள் அருகே தான் ஹீரோயினுக்கு ஒரு சீட்டை போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், நேற்று நடைபெற்ற நேசிப்பாயா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அதிதி ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயன் அருகில் அமர்ந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மேலும், மேடை ஏறி பேசும் போது கூட, சிவகார்த்திகேயன் பக்கத்தில் அமர்ந்து அதிதி ஷங்கர் அடித்த அரட்டைகளையும் வெளிப்படையாக பேசி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் ஷங்கர் மகள். நான் எவ்வளவு டீசன்ட்டாக பேசுகிறேன் பார்த்தீங்களா என மேடையில் இருந்தபடியே சிவகார்த்திகேயனிடம் சொல்லி அவரை நெளியவே வைத்து விட்டார்.

கேபிஒய் பாலா இதுதான் சாக்கு என ஷங்கர் மகளை மேடையிலேயே பங்கமாக கலாய்த்த கலகலப்பான காட்சிகளும் அரங்கேறியுள்ளன.
நேசிப்பாயா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், குஷ்பு, பிரபு மற்றும் சரத்குமார் நடித்துள்ள நேசிப்பாயா படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் ஹீரோயின் அதிதி ஷங்கர் மேடையில் பேசிய காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
சிவகார்த்திகேயன் பக்கத்தில் சீட்டு: நேசிப்பாயா படத்தின் ஹீரோ ஆகாஷ் முரளி அருகே அமராமல் தனது முந்தைய படமான மாவீரன் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் அருகே அமர்ந்துக் கொண்டு அதிதி ஷங்கர் அடித்த அரட்டைகளை அப்படியே மேடையில் பேசும் போது உளறிக் கொட்டி அரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்திவிட்டார். ஷங்கரின் மகள் இந்த அளவுக்கு ஓபன் டைப்பா என ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.
https://x.com/kayaldevaraj/status/1875194868836024640
(embed)
அடக்கிட்டு இருக்கேன்: நான் மேடையில் ரொம்பவே டீசன்ட்டாக பேசுகிறேன். எனக்கு சிவகார்த்திகேயன் இங்கே வருவார் என தெரியாது. நான் நேசிப்பாயா படத்தின் நிகழ்ச்சியையே மறந்துவிட்டு அவர் அருகே அமர்ந்துக் கொண்டு ஸ்கூல் ஆனிவல் டேவில் பசங்களோட அரட்டை அடிப்பது போல அடித்துக் கொண்டிருந்தேன். அவர் அடக்கி வாசிக்க சொல்ல, நான் அடக்கிட்டு இருக்கேன் அடக்கிட்டு இருக்கேன் என்றே இதுவரை பேசிக் கொண்டிருந்தோம் என்று கூட்டத்தில் கட்டுச் சோத்தை அவிழ்த்துவிட்டார் அதிதி ஷங்கர்.
அதிதியை கலாய்த்த பாலா: பொங்கலுக்கு பொதுவாக குடும்ப படம் வரும். இந்த பொங்கலுக்கு உங்களோட குடும்பத்தோட படங்களாக வருதே என அதிதி ஷங்கரை பார்த்து நிகழ்ச்சி தொகுப்பாளரான கேபிஒய் பாலா கலாய்த்துவிட்டார். இதுவரை நல்லா தானே போயிட்டு இருந்துச்சு என சொன்ன அதிதி ஷங்கர் அப்பா கேம் சேஞ்சர் படமும் தன்னோட நேசிப்பாயா படமும் இந்த பொங்கலுக்கு வருவது பற்றி ஏகப்பட்ட பேர் அப்பா vs அதிதியா என கேட்கின்றனர். ஆனால், அதெல்லாம் கிடையாது, ரசிகர்கள் இந்த பொங்கல் ஹாலிடேவை எல்லா படங்களையும் பார்த்து ஜாலியாக கொண்டாடணும் என்று பேசி முடித்தார்.
அதிதி படிச்ச பள்ளி: நேசிப்பாயா படத்தை தன்னை நம்பிக் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன், சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயன், படத்தின் தயாரிப்பாளர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்த அதிதி ஷங்கர். இந்த லேடி ஆண்டாள் ஸ்கூலில் தான் நான் படிச்சேன். எனக்கு நிஜமாகவே இன்னொரு ஆண்டு விழா நிகழ்ச்சி போலவே இருக்கு என லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்ற நேசிப்பாயா நிகழ்ச்சியில் பேசினார்.


Click it and Unblock the Notifications











