அதிதி ஷங்கருக்கே தண்ணி தரலையா?.. இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு விழாவில் சோகத்தில் ஷங்கர் மகள்!
சென்னை: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. ராம்சரண் உள்ளிட்ட எந்த ஒரு பிரபலமும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. படத்தில் நடித்த சித்தார்த் தனது காதலியுடன் ஜாலி டூர் சென்றுள்ளார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வரும் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ், எச். வினோத் மற்றும் நெல்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

அனிருத் இசையில் வெளியான கதறல்ஸ் பாடல் தான் நேரு ஸ்டேடியத்தை அதிர விட்டு வருகிறது. சோசியல் மீடியா முழுக்க அனிருத் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கம்பேரிசன் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கின்றன.
சூப்பரா? சொதப்பலா?: இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில், அனைத்துப் பாடல்களும் வெளியாகிவிட்டன. அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் சூப்பரான சில ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சொதப்பல் என சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏ. ஆர். ரஹ்மான் இந்தியன் படத்துக்கு போட்ட பாடல்கள் அளவுக்கு எந்த ஒரு பாடலும் இல்லை என்று விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இசை வெளியீட்டு விழாவுக்கு ஆவது ஏ.ஆர். ரஹ்மானை அழைத்து வந்து பேச வைத்திருக்கலாம். ஆனால், லைகா அதையும் செய்யவில்லை.

கமல் கம்பெனி: விஜய் டிவி புராடெக்ட்ஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படி போட்டியாளர்களாக ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்று வருகிறார்களோ அதேபோல இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் கமல்ஹாசனின் கம்பெனி ஆட்கள் போலவே உள்ளனர் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சிம்பு, சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், நெல்சன், எச். வினோத் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
அதிதி ஷங்கருக்கு தண்ணி கொடுக்கல?: ரெட் கார்ப்பெட்டில் கவர்ச்சி உடையை அதிதி ஷங்கர் வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து மைக் பிடித்து பேசினார். அப்போது, என்ன எல்லாரும் டல்லா இருக்கீங்க ஹேப்பியா இருங்க என அவர் சொல்ல, ஒருவர் தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்றார். உடனடியாக புரொடக்ஷன் டீமிடம் சொல்லி தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்வார் என்று பார்த்தால், ஷங்கர் பொண்ணுன்னா சும்மாவா என்கிற ரேஞ்சுக்கு தனக்கே தண்ணீர் தரவில்லை என்றார். மேலும், நான் குடிக்கிற தண்ணீரை தான் சொன்னேன், மற்றபடி வேறு எந்த தண்ணியையும் குறிப்பிடல என பேசி அங்குள்ளவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
அப்பா படத்தில் எப்போ?: நடிகை அதிதி ஷங்கரின் அடுத்த படம் எப்போது என்கிற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் எழுப்ப இது இந்தியன் 2 நிகழ்ச்சி இங்கே இந்தியன் 2 படத்தை பற்றி மட்டுமே பேசுவோம். இன்னொரு நாள் உங்களுக்கு நிறைய அப்டேட்களை கொடுக்கிறேன் என்றார். அப்பா ஷங்கர் படத்தில் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என்கிற கேள்விக்கு, அது அப்பா கையில் தான் உள்ளது. எனக்கான ரோல் இருந்தால் நிச்சயம் கொடுப்பார். அதற்காக நான் அடம்பிடிக்கலாம் மாட்டேன் என்றார். மேலும், இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பர்ஃபார்ம் பண்ணப் போவதாகவும் கூறியுள்ளார். விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி ஷங்கர் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











