குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்.. செம கிளாமரா மாறிட்டாரே.. சுடச்சுட வெளியான சூப்பர் வீடியோ!
சென்னை: இயக்குநர் ஷங்கர் தனது மகள் அதிதி ஷங்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய நிலையில், அவர் அவுட்டேட்டட் இயக்குநர் என ஓரங்கட்டப்பட்டு விட்டார். இந்தியன் 2 மற்றும் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களின் தோல்வி அவரது அடுத்த கனவுப் படமான வேள்பாரி படத்திற்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காத அளவுக்கு அவரை பாடாய்படுத்தி வருகிறது என்கின்றனர்.
அடுத்ததாக ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் ஹீரோவாகவும் சீக்கிரமே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிதி ஷங்கர் ஹீரோயினாக கார்த்தி, சிவகார்த்திகேயன் என கேரியரை தொடங்கினாலும், அதன் பிறகு அவருக்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து விட்டன.

மேலும், அவர் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக போகாத நிலையில், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
ஷாருக்கான் பாட்டுக்கு ஷங்கர் மகள் குத்தாட்டம்: ரா ஒன் படத்தில் ஷாருக்கான் ஆட்டம் போட்ட சம்மக் சல்லோ பாடலுக்கு வைப் செய்வது போல நடனமாடும் வீடியோவை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ளார். அவரது வீடியோவுக்கு ஆயிரக் கணக்கில் லைக்குகளும் ஹார்ட்டின்களும் குவிந்து வருகின்றன.
அடுத்த படம் என்ன?: கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் அறிமுகமான அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். அந்த 2 படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. கோலிவுட்டின் அடுத்த டாப் நடிகையாக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியின் நேசிப்பாயா படத்தில் இந்த ஆண்டு நடித்திருந்தார். அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும், அர்ஜுன் தாஸ் ஜோடியாக அவர் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. அதை தாண்டி புதிதாக எந்தவொரு படத்திலும் இதுவரை அதிதி ஷங்கர் கமிட் ஆகவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. இசை நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications











