Aditi Shetty: ராணா நாயுடு வெப்சீரிஸில் அப்படி நடிச்சாரே.. பாலி தீவில் டூ பீஸில் எப்படி இருக்காரு பாருங்க!

By Staff

ஹைதராபாத்: ராணா டகுபதி நடித்த ராணா நாயுடு வெப்சீரிஸில் வேறலெவல் ரோலில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்த அதிதி ஷெட்டி தற்போது பாலி தீவில் சுற்றுலா சென்றுள்ள நிலையில், பிகினி போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளையும் ஃபாலோயர்களையும் அள்ளி வருகிறார்.

க்ரோக் ஏஐ மூலம் கடந்த ஒரு மாதமாக ஏகப்பட்ட பெண்கள் மற்றும் நடிகைகள் புகைப்படங்கள் வெளியானாலே பிகினியில் மாற்றி கொடு என கேட்க, க்ரோக் ஏஐ உடனடியாக மாற்றிக் கொடுத்து ஆசையை தூண்டியது.

Aditi Shetty shares her Bali trip night photos
Photo Credit:

இப்போ அதனிடம் கேட்டால், எல்லாமே இலவசமா பண்ணுவாங்களா பாஸ், அதுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க என தனது சம்பாதிக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார் எலான் மஸ்க். இந்நிலையில், நடிகைகள் மீண்டும் இன்ஸ்டாகிராமில் பிகினி ஷோ காட்டி தங்களது இன்ஸ்டாகிராம் வேலையை தொடங்கி விட்டனர்.

யாரு இந்த அதிதி ஷெட்டி?: நடிகை அதிதி ஷெட்டி, 'ராணா நாயுடு' வெப் சீரிஸின் இரண்டாவது சீசனில் 'தஸ்னீம்' என்ற போல்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடருக்கு முன்னர் நடந்த சில சுவாரஸ்யமான அனுபவங்கள் மற்றும் தனது திருமண வதந்திகள் குறித்து அதிதி ஷெட்டி மனம் திறந்து பேசியுள்ளார்.

தஸ்னீம் கதாபாத்திரத்தில் நடிக்க, அதிதி கடுமையான உடல் வலிமை பயிற்சி மற்றும் பேச்சுத் தழுவல் பயிற்சிகளை மேற்கொண்டார். ராணா நாயுடுவின் உலகத்தில் தனது நிலையை உறுதியாக நிலைநிறுத்தும் ஆக்‌ஷன் ஹீரோயினாக தஸ்னீம் வருகிறார். இக்கதாபாத்திரம், உடல் பலம் மற்றும் உணர்ச்சி ஆழம் ஆகியவற்றின் ஒரு அரிய கலவையாகும். அபிஷேக் பானர்ஜியின் கதாபாத்திரத்துடனான இவர்களின் காதல் கதை, தொடரின் தீவிரமான சண்டைகள் மற்றும் நாடகங்களுக்கு ஒரு மென்மையான பரிமாணத்தைச் சேர்க்கிறது.

Aditi Shetty shares her Bali trip night photos

வெப்சீரிஸில் ஆக்‌ஷன் ஹீரோயின்: 'ராணா நாயுடு' வெப் சீரிஸில் பணியாற்றிய அனுபவம் தனக்கு மிகவும் சிறப்பானதாகவும், மறக்க முடியாததாகவும் அமைந்ததாக அதிதி குறிப்பிட்டார். இது ஒரு வரப்பிரசாதம் என்றே அவர் கூறினார். படக்குழு மிகவும் தொழில்முறை மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட்டது. ராணா டகுபதி, சுஷாந்த் சிங், அர்ஜூன் ராம்பால், அபிஷேக் பானர்ஜி போன்ற அனுபவமிக்க நடிகர்களுடன் பணிபுரிந்தது ஒரு பெரிய வாய்ப்பாக அவருக்கு அமைந்தது.

ராணா டகுபதியுடன் சண்டை: தஸ்னீமின் குணம் தனது நிஜ வாழ்க்கையின் ஆளுமையிலிருந்து கணிசமாக மாறுபடுவதாக அதிதி ஷெட்டி விளக்கினார். தான் இயல்பாகவே விரைவாகப் பேசக்கூடியவர் மற்றும் தன்னிச்சையானவர். ஆனால் தஸ்னீம், நிதானமாகவும் திட்டமிட்டும் பேசக்கூடியவர். அவர் பேசும்போது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார். மேலும், துணிச்சலானவர், நேரடியானவர், சமரசமின்றி தனது அதிகாரத்தை நிலைநிறுத்துபவர். யாருடைய அழுத்தத்திற்கும் கட்டுப்படாத இக்குணம் அதிதியின் நிஜ ஆளுமையிலிருந்து வேறுபட்டதாகும்.

ராணா டகுபதியுடன் நேரடி சண்டை காட்சியில் நடிக்கவிருக்கும் செய்தியைக் கேட்டபோது, மகிழ்ச்சியும், அதே சமயம் பதட்டமும் அடைந்ததாக அதிதி பகிர்ந்து கொண்டார். "இதை எப்படிச் செய்வேன், சரியாக வருமா?" போன்ற கேள்விகள் மனதில் எழுந்தன. ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன், ராணா டகுபதி சூழலை இயல்பாக்கிவிட்டார். அவர் மிகவும் அமைதியாகவும், ஒத்துழைப்புடனும் செயல்பட்டு, தான் புதியவர் என்றோ, தவறு செய்கிறார் என்றோ அதிதிக்கு ஒருபோதும் உணர வைக்கவில்லை.

பாலி தீவில் ஜாலி: முதல் சீசனில் வாய்ப்பு கிடைக்காமல் போனபோது ஏமாற்றமடைந்தாலும், நிராகரிப்பை ஒரு கற்றல் அனுபவமாக ஏற்றுக்கொண்டதாக அதிதி கூறினார். இரண்டாவது சீசனுக்கான ஆடிஷன் அழைப்பு வந்தபோது, எந்த தயக்கமும் இல்லாமல் மீண்டும் முயற்சித்தார். இம்முறை அவர் வெற்றி பெற்று, தொடரில் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றார். இது அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்.

வெப்சீரிஸ், படங்கள் மற்றும் சின்னத்திரை என கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் அதிதி ஷெட்டி தற்போது பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட பிகினி போட்டோக்களை வெளியிட்டு, இரவில் பாலி ரொம்பவே அழகா இருக்கு என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X