கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க.. விஜய்யுடன் ஜில்லா படத்தின் ‘ஜிங்குனமணி’ பாடலுக்கு ஆடியவரின் போஸ்ட்!

சென்னை: கடந்த 2014ம் ஆண்டு இயக்குநர் நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தின் ஆரம்ப பாடலான "ஜிங்குனமணி" பாடலுக்கு நடனமாடிய இங்கிலாந்தை சேர்ந்த மாடல் நடிகை தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.

அந்த போஸ்ட்டில் விஜய்யுடன் ஜிங்குனமணி பாடலுக்கு நடனமாடியபோது எடுக்கப்பட்ட பாடல் மேக்கிங் வீடியோவையும் ஷேர் செய்துள்ள அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் மாறியது குறித்து அறிந்தும் இந்த போஸ்ட்டை பதிவிட்டுள்ளார்.

Adjust a little bit - Vijay s Jilla fame Jingunamani Dancer post about CM Vijay
Photo Credit:

மேலும், இந்தியாவில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு வார்த்தை என "கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க" என்கிற வார்த்தையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜில்லா ஜிங்குனமணியா இது?: விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் இடம்பெற்ற ஜிங்குனமணி பாடலுக்கு நடனமாடிய மாடல் நடிகை ஹேசல் பாஸ்ஃபரன்ஸ் எனும் இன்ஸ்டாகிராம் ஐடியில் ஜில்லா படத்தின் போது விஜய்யுடன் எடுத்த சில புகைப்படங்களையும் அந்த ஜிங்குனமணி பாடல் மேக்கிங் வீடியோவையும் ஷேர் செய்து போஸ்ட் போட்டுள்ளது தளபதி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Adjust a little bit - Vijay s Jilla fame Jingunamani Dancer post about CM Vijay
Photo Credit:

கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க: "இந்தியாவைப் பற்றி எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று என்னவென்றால், இங்கே எதுவும் சாத்தியமே! இங்கே அடிக்கடி கேட்கப்படும் ஒரு அழகான சொல் "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!". பல நேரங்களில் குழப்பமாகத் தோன்றும் சூழலிலும், எல்லாம் எப்படியோ சரியாக நடக்க ஒரு இடத்தை அது உருவாக்குகிறது.

அந்த "அட்ஜஸ்ட்" மனப்பான்மையால்தான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணான எனக்கு இந்திய திரைப்படத் துறையில் நடிக்கவும், நடனமாடவும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல், தனது அசத்தலான நடனத்தால் புகழ்பெற்ற தென்னிந்திய நடிகரான விஜய் அவர்கள், தமிழ்நாட்டின் முதல்வராகும் கனவை நோக்கி அரசியல் பயணத்தைத் தொடங்கும் அளவுக்கு வளர்ந்தார். (சமீபத்தில் அவர் தனது அரசியல் பணிகளில் முழு கவனம் செலுத்துவதற்காக திரைப்படங்களை விட்டு விலகியுள்ளார்.)

அவருடன் நடித்த ஜில்லாவில் இடம்பெற்ற 'ஜிங்குனமணி' பாடல் படப்பிடிப்பின் பின்னணியில் எடுத்த சில இனிய தருணங்களை உங்களுடன் பகிர்கிறேன்." என பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து ஜிங்குனமணியிடம் இருந்து இப்படியொரு போஸ்ட் வந்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் உங்களை மறக்கவே இல்லை என கமெண்ட் போட்டு வருகின்றனர். சினிமாவில் சகிப்புத்தன்மை மற்றும் எந்த சூழலையும் தாங்கிக் கொள்ளும் மனம் இருந்தால் தான் சாதிக்க முடியும் என்பதையே அவர் குறிப்பிடுகிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X