நயன்தாரா, திரிஷாவிடமெல்லாம் அட்ஜெஸ்ட்மெண்ட் செல்லுபடியாகாது.. ஓபனாக சொன்ன பத்திரிகையாளர்
சென்னை: தமிழ் சினிமாவில் நயன்தாராவும், திரிஷாவும் முன்னணி நடிகைகளாக கடந்த பல வருடங்களாக திகழ்ந்துவருகின்றனர். இப்போதும் அவர்கள் இருவரது கைகளிலும் ஏராளமான படங்கள் இருக்கின்றன. நயனை பொறுத்தவரை மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.மேலும் மலையாள படத்திலும் நடிக்கிறார். அதேபோல் திரிஷா விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களை கைகளில் வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர்கள் பற்றி பத்திரிகையாளர் உமாபதி சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
ஐயா படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. அந்தப் பட ஹிட்டுக்கு பிறகு ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்தார். அந்தப் படமும் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கால் பதித்து அங்கும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார். கடைசியாக அவர் ஹிந்தியில் ஜவான் படத்திலும், தமிழில் அன்னபூரணி படத்திலும் நடித்திருந்தார்.

திருமணம்: இப்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற மகன்கள் இருக்கின்றார்கள். திருமணம் முடிந்து குழந்தை பெற்றுக்கொண்டாலும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவருகிறார் அவர். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். 40 வயதை நெருங்கினாலும் அவரது பிஸி ஷெட்யூலையும், அழகையும் பார்த்து திரைத்துறையினரும், ரசிகர்களும் ஆச்சரியப்படுகிறார்கள்.
திரிஷாவின் வளர்ச்சி: அதேபோல் ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமான திரிஷாவும் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். அவரும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இப்போதும் பிஸியாக நடித்துவரும் அவர் கடைசியாக லியோ படத்திலும், பிருந்தா என்ற வெப் சீரிஸிலும் நடித்தார். 40 வயதுக்கு மேல் ஆகும் அவருக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை. அடுத்ததாக விடாமுயற்சி, தக் லைஃப் படங்கள் அவரது நடிப்பில் வெளியாகவிருக்கின்றன.
தலைவிரித்தாடும் பிரச்னை: இப்படி இந்த இரண்டு நடிகைகளும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக டாப் நடிகைகளாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டு பேருமே பெரும் பிரச்னைகளை எல்லாம் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அவைகளை கண்டு அஞ்சாமல் தங்களது கரியரில் மட்டுமே கவனம் செலுத்திவருவதால் இன்னமும் டாப் இடத்தில் நீடிக்க முடிகிறது என்பது மட்டும் உண்மை. இந்தச் சூழலில் பல நடிகைகளுக்கு தொடர்ந்துகொண்டிருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னையில் இவர்கள் சிக்கினார்களா என்பது குறித்து பத்திரிகையாளர் உமாபதி பேசியிருக்கிறார்.
உமாபதி பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், "நயன்தாரா அப்பர் மிடில் கிளாஸிலிருந்து வந்தவர். அதனால் அவரிடமெல்லாம் அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் செல்லுபடியாகாது. அவராக விருப்பப்பட்டால்தான் காதலோ, வேறு எதுவோ செய்ய முடியும். அவரை நிர்பந்திக்கவெல்லாம் முடியவே முடியாது. அதேபோல்தான் திரிஷாவும். அவரும் வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் உழைத்தால்தான் வீட்டில் அடுப்பு எரியும் என்ற நிலையெல்லாம் இல்லை. எனவே இவர்கள் இருவரிடமும் அந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் செல்லுபடியாகாது. கஷ்டத்தில் இருக்கும் நடிகைகளைத்தான் பலர் குறிவைப்பார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











