28 ஆண்டுகளுக்கு பிறகு... என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் பட நடிகை.. எந்த படத்தில் தெரியுமா ?
சென்னை : 28 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார் ராமராஜன் பட நடிகை.
80களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தமிழ் தெலுங்கு,கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார்.

செண்பகமே... செண்பகமே
1987ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் பாவாடை தாவணியில் செண்பகமே... செண்பகமே பாடலை பாடிக்கொண்டு வரும் சாந்திப்பிரியாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து இருக்க முடியாது. அது அவருக்கு முதல் படம் என்றாலும் அந்த படத்தில் அவரின் எதார்த்தமான நடிப்பால் அனைவராலும் பேசப்பட்டார்.

பல திரைப்படங்களில்
முதல் படத்தின் வெற்றிக்குப்பிறகு ஒன்று எங்கள் ஜாதியே , ரயிலுக்கு நேரமாச்சு, நேரம் நல்லா இருக்கு என பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போதே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

பல ஆண்டுகள் கழித்து
பானுபிரியாவின் தங்கையான சாந்திப்பிரியா 26 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்படும் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த நாட்டை தட்டிஎழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

வெப் தொடரில்
ஜீ ஸ்டூடியோ நிறுவனம் Mx player க்காக முன்னணி நடிகர்களை வைத்து பிரம்மாண்டமான வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த வெப்சீரிஸ் இந்தி மற்றும் தமிழில் தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











