Rajinikanth: 32 ஆண்டுகளுக்கு பிறகு.. ரஜினிகாந்துடன் தலைவர் 171 படத்தில் ஜோடி சேரும் க்யூட் நாயகி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள படம் தலைவர் 171. இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ள நிலையில் முன்னதாக வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து படத்தின் டைட்டில் பிரமோ வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் கழுகு என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இந்த மாதத்துடன் முடியவுள்ள சூழலில் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்றைய தினம் இந்த அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த இரு படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரித்த சூழலில் அடுத்ததாக லைகா நிறுவனத்தின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள சூழலில் இந்த மாதத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது.
தலைவர் 171 படம்: இந்தப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் வரும் ஜூன் மாதம் இணைய உள்ளார் ரஜினிகாந்த். இந்தப்படத்தில் ரஜினிகாந்தை இதுவரை இல்லாத அளவில் காட்டவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். இதற்கேற்ப கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வித்தியாசமான வகையில் ரஜினியை காட்சிப்படுத்தியது. அவர் கைகளில் வாட்ச்களால் ஆன விலங்கை போட்டிருப்பதாக காணப்பட்டது. இந்நிலையில் வரும் 22ம் தேதி இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் 171 படத்தின் நடிகர்கள்: இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான லியோ படத்தில் சிறப்பான கேரக்டரில் நடித்திருந்த சாண்டி மாஸ்டர், தலைவர் 171 படத்தில் இணைந்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இதை சாண்டி மாஸ்டரும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்துடன் இணையும் ஷோபனா?: இதனிடையே இந்தப் படத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஷோபனா ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக தளபதி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சுந்தரி பாடலில் இருவரின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையானால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











