Keerthy Suresh - மறுபடியும் முதல்லேர்ந்தா?.. கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருக்கும் அவர் யார்?
சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) கீர்த்தி சுரேஷ் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அவர்தான் கீர்த்தியின் காதலரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையு ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடம் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தேசிய விருது: இப்படிப்பட்ட சூழலில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: தமிழில் அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மாரி செல்வராஜ் முக்கியமான இயக்குநர் என்பதால் மாமன்னன் படமும் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் அவர் கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரகுதாத்தா என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
காதல் கிசுகிசு: இதற்கிடையே சமீபகாலமாக கீர்த்தி சுரேஷின் காதல் குறித்து பரவலாக பேசப்படுகிறது. அதாவது அவர் வளைகுடா நாட்டில் வசிக்கும் தனது சிறு வயது நண்பரான ஃபர்ஹான் என்பவரை காதலித்துவருவதாக தகவல் வெளியானது. மேலும் சமீபத்தில் ஃபர்ஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்தை கீர்த்தி சுரேஷ் சொல்லியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவது உறுதி என கூறினர்.
தீவிரமாக மறுத்த கீர்த்தி சுரேஷ்: இந்தப் பேச்சு தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க, சில நாள்களுக்கு முன்பு அதை தீவிரமாக மறுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் நடந்த மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கும், எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதிலேயே கவனமாக இருக்கீங்களே. திருமணம் செய்துகொண்டால் அதை நானே சொல்கிறே என கூறியிருந்தார்.
மறுபடியும் முதல்லேர்ந்தா?: இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தால் அவரது காதல் கிசுகிசு மீண்டும் தலைதூக்கியது. ஒருவர் கீர்த்தி சுரேஷை அணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்களில் ஒருதரப்பினர் ஒருவேளை இவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலராக இருப்பாரோ என கேள்வி எழுப்பிவருகின்றனர்.
ஆனால், கீர்த்தியின் ரசிகர்களோ ஏன் ஒரு ஆண் ஒரு பெண்ணை அணைத்திருந்தால் அவர் காதலராகத்தான் இருக்க வேண்டுமா நண்பராக இருக்கக்கூடாதா என பதில் கேள்வி வைத்துவருகின்றனர். இதற்கிடையே கீர்த்தியின் காதல் கிசுகிசுவால் நாங்கள் மன உளைச்சலில் இருக்கிறோம் என கீர்த்தி சுரேஷின் தந்தை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











