இது வெட்டிங் ஆனிவர்சரி வாரம்.. ஒரு பக்கம் அமலா பால்.. இன்னொரு பக்கம் ஹன்சிகா.. ஒரே மஜா தான்!
சென்னை: நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு இந்த வாரம் தனது முதல் திருமண நாளை குமரகத்தில் கொண்டாடிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவரை போலவே நடிகை ஹன்சிகா மோத்வானியும் தனது 2வது திருமண நாளை மாலத்தீவில் இந்த வாரம் கொண்டாடிய நிலையில், அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹன்சிகா மற்றும் அமலா பால் இருவரும் முன்னணி நடிகைகளாக இருந்தனர். ஆனால், தற்போது இருவருக்கும் மார்க்கெட் காலியான நிலையில், திருமண வாழ்க்கையில் செம ஜாலியாக இருந்து வருகின்றனர்.

திருமணத்துக்குப் பிறகும் அமலா பால் மற்றும் ஹன்சிகா நடித்து வந்தாலும், பெரிதாக அவர்கள் நடிக்கும் படங்கள் ஓடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2வது திருமண நாளை கொண்டாடிய ஹன்சிகா: கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நடிகை ஹன்சிகா சோஹைல் கத்தூரியா எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஹன்சிகா மோத்வானியின் திருமணம் அந்த ஆண்டே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. நயன்தாராவின் திருமணத்துக்குப் பிறகு ஹன்சிகா திருமணம் நடைபெற்றாலும், அவரது திருமண டாக்குமெண்டரி முந்திக் கொண்டது. ஆனால், அதையும் ரசிகர்கள் பெரிதாக கண்டுக் கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவில் மீண்டும் ஹனிமூன்: நடிகை ஹன்சிகா தனது தோழியை விவாகரத்து செய்த நபரையே திருமணம் செய்துக் கொண்டு 2ம் தாரமாக மாறியுள்ளார். நடிகர் சிம்புவுடன் பிரேக்கப் ஆன நிலையில், மஹா படத்தில் மீண்டும் ஹன்சிகாவுக்காக சிம்பு நடித்துக் கொடுத்தார். 2 ஆண்டுகள் ஆகியும் ஹன்சிகா இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை எடுக்கவில்லை என்றே தெரிகிறது. 2வது திருமண நாளை தனது கணவருடன் மாலத்தீவுக்கு சென்று கொண்டாடியுள்ளார் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சற்றுமுன் ஹன்சிகா வெளியிட்டு தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.
பீச்சில் ஓடி பிடித்து விளையாட்டு: மாலத்தீவில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களையும் பீச்சில் தனது கணவருடன் ஓடிப் பிடித்து விளையாடும் புகைப்படங்களையும் நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஷக்கலக்கா பூம் பூம் முதல் இப்போது வரை ஹன்சிகா எப்போதுமே செம க்யூட் தான் என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

திருமண புகைப்படங்களை வெளியிட்ட அமலா பால்: நடிகை அமலா பால் நேற்று தனது முதல் திருமண நாள் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்ட நிலையில், தற்போது தனது திருமண நாள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன.

குழந்தையுடன் கொண்டாட்டம்: போட் ஹவுஸில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அமலா பால் ஜாலியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார் அமலா பால். ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக இருந்த நடிகைகள் தற்போது திருமணமாகி குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications