Raashi Khanna: ராஷி கண்ணாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்.. எல்லாம் அரண்மனை 4 செய்த மாயம்!
சென்னை : நடிகர் சுந்தர் சி, தமன்னா, நடிகை ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள அரண்மனை 4 படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை கோலிவுட்டில் பெற்று தந்துள்ளது. இதே போல அவரது நடிப்பில் முன்னதாக பாலிவுடில் வெளியான ஃபார்ஸி வெப் தொடரும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ள சூழலில் அடுத்தடுத்து டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
அரண்மனை 4 படத்தில் தமன்னாவிற்கு இணையாக ராஷி கண்ணாவும் தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் சுந்தர் சி போன்ற நடிகைகளை நம்பி படம் இயக்கும் இயக்குனர்கள் சினிமாவில் அதிகரிக்க வேண்டும் என்று அவர் முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார். முன்னதாக விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் தனுசுடன் மாறன் படத்திலும் ராஷி கண்ணா இணையவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படங்களில் மாளவிகா மோகனன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராஷி கண்ணா: நடிகை ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் அரண்மனை 4 படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. முன்னதாக இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தொடர்ந்து அடங்கமறு, அயோக்கியா, சங்கத் தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் அரண்மனை 4 படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் கவர்ந்துள்ளார். முன்னதாக ராஷி கண்ணா நடிப்பில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்திருந்த ஃபார்ஸி வெப் தொடரும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.
அரண்மனை 4 படம்: தமிழில் அரண்மனை 4 படம் வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.காட்டியது சுந்தர் சி இயக்கத்தில் இணைந்தது குறித்து ராஷி கண்ணா முன்னதாக பேட்டியொன்றில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். சுந்தர் சி போன்ற பெண்களை நம்பும் இயக்குனர்கள் சினிமாவில் அதிகமாக உருவாக வேண்டும் என்றும் சினிமாவும் கலையும் பால் பேதங்களை கடக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சினிமாவில் ஆண் பெண் பேதம் இல்லாமல் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அரண்மனை 4 படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பாலி நடனம் கற்கும் ராஷி கண்ணா: தன்னுடைய உடலை ஆரோக்கியமாகவும் பிட்னசுடனும் வைத்துக் கொள்ளும் ராஷி கண்ணா, தொடர்ந்து ரசிகர்களை தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் கவர்ந்து வருகிறார். இதற்காக இவர் அதிகமாக மெனக்கெடுவதாக கூறப்பட்டுள்ளது. தினந்தோறும் யோகா பயிற்சி செய்வதுடன் பிட்னஸ் பயிற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். தினசரி உடற்பயிற்சியில் நடனத்தையும் சேர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ள ராஷி கண்ணா, இதற்காக பாலி நடனத்தையும் கற்றுக் கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
குவியும் பட வாய்ப்புகள்: இந்நிலையில் அடுத்தடுத்த அரண்மனை 4 மற்றும் ஃபார்ஸி வெப் தொடரின் வெற்றி, ராஷி கண்ணாவிற்கு பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் அதிகமான வாய்ப்புகளை பெற்று தந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடிகர் தனுஷின் மாறன் படத்திலும் ராஷி கண்ணா இணையவிருந்த நிலையில் அந்த படங்களில் மாளவிகா மோகனின் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ராஷி கண்ணாவின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











