ரொம்ப நாளைக்கு அப்புறம் புடவை போல.. நல்லா இருக்கு.. பிரபல நடிகையை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை பூனம் பஜ்வா சேலையில் ஷேர் செய்துள்ள போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.
மும்பையை பூர்விகமாக கொண்டவர் நடிகை பூனம் பஜ்வா. மொடட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் முலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பிஸியாக நடித்து வந்தார் பூனம் பஜ்வா. தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமானார்.

கடைசியாக தமிழில் குப்பத்து ராஜா
தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் பூனம் பஜ்வா. தமிழில் கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்தார். தற்போது பதோன்பதம் நூட்டண்டு என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

காதலரை அறிமுகம் செய்து வைத்த பூனம் பஜ்வா
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் அவருடன் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பூனம் பஜ்வா, தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

சேலையில் செம க்யூட் செல்பி
குறிப்பாக தொப்புள் தெரிய அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக டாப் ஆங்கிள் போட்டோ வயிறு தெரியும் போட்டோ என கலக்கி வந்த பூனம் பஜ்வா தற்போது சேலையில் செம க்யூட்டாக செல்பி எடுத்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சேலையில்
பூனம் பஜ்வாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு சேலையில் காட்சிக் கொடுத்துள்ளீர்கள் செம க்யூட்.. அமேஸிங்.. ஸ்டன்னிங் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

நீல நிற ஜாக்கெட் ஆரஞ் நிற சேலை
பூனம் பஜ்வா நீல நிற ஜாக்கெட் ஆரஞ் நிற சேலையில் ஜிமிக்கி நெக்லெஸ் என அணிந்துள்ள பூனம் பஜ்வா ஃபிரி ஹேர் விட்டு செம கலக்கலாய் போஸ் கொடுத்துள்ளார். பூனம் பஜ்வாவின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருவதோடு.. வைரலாகவும் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











