நயன்தாராவை மட்டுமல்ல இந்த சிம்பு பட நடிகையையும் சந்தித்த த்ரிஷா.. வெறித்தனமா வொர்க்கவுட் வேற!

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை ராதிகா சரத்குமார் குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை த்ரிஷா தற்போது துபாயில் தான் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், அஜித் குமாரின் கார் பந்தயத்தை நேரில் காண அபுதாபிக்கு நடிகை நயன்தாரா சென்ற நிலையில், துபாயில் நடிகை த்ரிஷாவையும் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

மேலும், விமான நிலையத்தில் வலைப்பேச்சு டீம் உடன் அவரும் அவர் குடும்பத்தினரும் சந்தித்துக் கொண்ட வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. நடிகை த்ரிஷா சூர்யாவின் கருப்பு படத்தில் நடித்து முடித்த நிலையில், புதிதாக எந்தவொரு படத்திலும் அவர் கமிட் ஆகவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நயன்தாராவை சந்தித்ததை போலவே சிம்புவுடன் நடித்த இன்னொரு நடிகையையும் த்ரிஷா சந்தித்து எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

After Nayanthara Trisha also meets another Simbu heroine and her workout still also goes viral
Photo Credit:

நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இல்லை: த்ரோபேக் பேட்டி ஒன்றில் நயன்தாரா, த்ரிஷாவும் நானும் தோழிகள் எல்லாம் கிடையாது. இந்த இண்டஸ்ட்ரியில் நடிகைகள் இன்னொரு நடிகையுடன் சகஜமாக பழகும் சூழல் கூட இல்லை என பேசியிருந்தார். ஆனால், தற்போது இருவரும் "முஸ்தபா" பாடலை போட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக சந்தித்த காட்சிகள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்தது.

After Nayanthara Trisha also meets another Simbu heroine and her workout still also goes viral
Photo Credit:

சிம்பு பட நடிகையுடன் த்ரிஷா: நயன்தாரா, த்ரிஷா எல்லாமே சிம்புவுடன் பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால், இவர்கள் இருவருக்கும் முன்னதாக சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்த சார்மி கவுர் துபாய்க்கு சென்ற நிலையில், அவருடனும் த்ரிஷா சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். சீனியர் நடிகைகள் எல்லாம் திடீரென சந்தித்து கொள்வதற்கு பின்னணியில் என்ன பிளான் உள்ளது என்றும் ஆச்சர்யமாக உள்ளது.

வெறித்தனமாக வொர்க்கவுட்: பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு விஜய்யுடன் லியோ, கோட் படத்தில் ஒரு குத்தாட்டம், அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என வரிசையாக நடித்த த்ரிஷா சூர்யாவுடன் கருப்பு படத்தில் கமிட்டாகி நடித்தார். ஆனால், அதன் பின்னர் திடீரென அடுத்தடுத்து படங்களை புக் பண்ணாமல் ரெஸ்ட் எடுத்து வரும் த்ரிஷா வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து வருகிறார். சீக்கிரமே சமந்தா போல கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X