பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அந்த பிரபல நடிகையின் பயோபிக்குக்கும் குறிவைக்கும் ஐஸ்வர்யா ராய்!

மும்பை: பிரபல தியேட்டர் நடிகை வினோதினி தாஸி பயோபிக்கில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வனில் ராணி நந்தினியாகவும், ராஜமாதா ஊமச்சியாகவும் டபுள் ரோலில் ஐஸ்வர்யா நடித்து வரும் நிலையில், அடுத்த படத்திற்கான கதையையும் கேட்டுள்ளார்.

வினோதினி தாஸி

வினோதினி தாஸி

கல்கத்தாவில் 1862ம் ஆண்டு பிறந்த வினோதினி தாஸி தனது 12வயதிலேயே நாடக நடிகராக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். விலைமகளாக பிறந்து வளர்ந்த வினோதினி தனது அதீத நடிப்பு திறமையால் உலகம் முழுவதும் பிரபலமானார். ஆனால், அந்த புகழை கண்டு பயந்து தனது 23வது வயதிலேயே நடிப்பதை நிறுத்தினார் வினோதினி. அவர் எழுதிய அமர் கதா எனும் புத்தகம் உலகளவில் பிரபலமானது.

வித்யா பாலன்

வித்யா பாலன்

வினோதினி தாஸியின் பயோபிக்கை படமாக்க எடுக்க முனைந்து வருகிறார் இயக்குநர் பிரதீப் சர்கார். வினோதினி தாஸியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனை முதலில் தேர்வு செய்த பிரதீப் சர்கார் அவரிடம் கதையை சொல்லியுள்ளார். ஆனால், கால்ஷீட் காரணமாக வித்யா பாலன் ஓகே சொல்லவில்லையாம்.

பிடித்துப் போனது

பிடித்துப் போனது

ஐஸ்வர்யா ராயிடம் தற்போது வினோதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போகிறேன் என ஒன்லைன் சொல்லியுள்ளார் இயக்குநர் பிரதீப் சர்கார். வினோதினியின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராய்க்கு கதை பிடித்துள்ளது என்றும் சீக்கிரம் முழு ஸ்க்ரிப்ட் கொடுங்க என கேட்டுள்ளாராம்.

செம்ம பிஸி

செம்ம பிஸி

ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் செம்ம பிஸியாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்குத் தான் செம்ம வெயிட்டான வில்லி ரோல் என்பதால், கூடுதல் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ராணி நந்தினியாகவும், ஊமச்சி பெண்ணாகவும் டபுள் ரோலில் பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

விக்ரமுடன்

விக்ரமுடன்

நடிகர் விக்ரமுடன் ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரமின் காதலியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதால் சீயான் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

வயசான ரோல்

வயசான ரோல்

ஓமங் குமார் இயக்கத்தில் வெளியான சரப்ஜித் படத்தில் வயதான தோற்றத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் பொன்னியின் செல்வனில் வயதான ஊமச்சி ரோலில் நடித்து வருகிறார். மேலும், வினோதினி தாஸி பயோபிக்கில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்தார் என்றால், அந்த படத்தில் 23 வயது பெண்ணாகவும், வயதான பெண்மணியாகவும் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X