மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவி?.. ஹீரோ யார் தெரியுமா?.. அட சூப்பரா இருக்குமே

சென்னை: நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு என கலக்கிவந்தார். இப்போது ஹிந்தியிலும் ராமாயணம் படத்தில் நடிக்கவிருக்கிறார். பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் அப்படத்தில் சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்தை ஏற்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்து தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்த சாய் பல்லவி; முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார். படமும் மெகா ஹிட்டானது. அதன் காரணமாக அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் வந்த வாய்ப்புகள் அனைத்தையும் அவர் அக்செப்ட் செய்யாமல்; தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியும், கிளாமர் இல்லாத ரோல்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

தமிழிலும் நல்ல பெயர்: மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் நடிக்க ஆரம்பித்த அவர்; மாரி 2, என்ஜிகே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்களில் கார்கி தவிர்த்து மற்ற படங்கள் தோல்வியடைந்தன. அதிலும் கார்கி வணிக ரீதியாக வெற்றி பெறாமல் நல்ல படம் என்ற பெயரை பெற்று விருதுகளை மட்டும் வென்றது. தாய்மொழியான தமிழில் ஒரு பிரேக் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தார் பல்லவி.

After Ramayana Sai Pallavi May Team Up with Mani Ratnam and Vijay Sethupathi
Photo Credit:

அமரன் இந்து: அப்படிப்பட்ட சூழலில்தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்தார். மறைந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜின் வாழ்க்கை வரலாறை வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில்; இந்து என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். ஒவ்வொரு சீனிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி எஸ்கேவைவிடவும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் சாய் பல்லவியின் நடிப்பும் ஒன்று.

ஹிந்தியில் சாய்: தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கிவந்த அவர்; அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார். ராமாயணம் என்ற படத்தில் சீதை கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் எப்படி சாய் பல்லவிக்கென்று தனி மார்க்கெட் உருவாகியிருக்கிறதோ அதேபோல் பாலிவுட்டிலும் உருவாகும் என்பது அவருடைய ரசிகர்களின் நம்பிக்கை. இந்நிலையில் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

என்ன தகவல்?: அதாவது மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கவிருப்பதாகவும்; அவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்த மணிரத்னம், 'நான் சாய் பல்லவியின் தீவிரமான ரசிகன். அவருடன் வேலை செய்யும் நேரத்துக்காக காத்திருக்கிறேன்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X