தமன்னாவை ஆன்ட்டி என அழைத்த இளம் நடிகை.. பட்டுன்னு ஒரு அடி போட்டு டென்ஷனான மில்க் பியூட்டி!
மும்பை: சாது, ஆளவந்தான், கேஜிஎஃப் சாப்டர் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த நடிகை ரவீணா டாண்டனின் மகள் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள நிலையில், அவரது படத்தின் ப்ரீமியருக்கு வந்த நடிகை தமன்னாவை ஆன்ட்டி என அழைக்க உடனடியாக தமன்னா டென்ஷனான வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
பொதுவாக பெண்களை ஆன்ட்டி என அழைத்தாலோ, அக்கா என அழைத்தாலோ கடுப்பாகி விடுவார்கள். ஆனால், சமீப காலத்தில் பல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் அக்கா என்கிற வார்த்தையையே கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

சீனியர் நடிகை ரவீணா டாண்டனின் மகள் திடீரென இன்னமும் திருமணம் ஆகாமல் தனது காதலர் விஜய் வர்மாவுடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஆன்ட்டி என அழைத்தால் கோபப்படுவது நியாயம் தானே என தமன்னாவின் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
வாரிசு நடிகையாக அறிமுகம்: பாலிவுட்டில் ஏகப்பட்ட பிரபலங்களின் வாரிசுகள் தான் ஹீரோக்களாகவும் ஹீரோயின்களாகவும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். வெளியில் இருந்து வருபவர்களை திரைத்துறையில் நீடித்து நிற்க விடாமல் செய்து வருவதாகவும் நெப்போடிசம் குற்றச்சாட்டுக்கள் அதிகம் நிலவி வரும் சூழலில் நடிகை ரவீணா டாண்டனின் மகள் ராஷா ததானி ஆசாத் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
தமன்னா ஆன்ட்டி: ஜெயிலர் படத்தில் கவர்ச்சி உடையில் காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்ட தமன்னா பாலிவுட்டில் ஆபாசமாக பல படங்களிலும் வெப்சீரிஸ்களில் நடித்து இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நிலையில், 19 வயதான இளம் நடிகை ராஷா ததானி தமன்னாவை ஆன்ட்டி என அழைக்க பட்டென அவர் தோள் மீது லேசான அடிபோட்டு ஆன்ட்டின்னுலாம் சொல்லக் கூடாது என செல்லமாக கண்டித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சிரித்த விஜய் வர்மா: தமன்னாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்து அவரை காதலித்து வரும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா தமன்னாவை ராஷா ததானி ஆன்ட்டி என அழைத்ததை கேட்ட உடனே சிரித்து விட்டார். 15 வயதில் சினிமாவில் நடிக்க வந்த தமன்னாவுக்கு தற்போது 35 வயதாகிறது. 19 வயதான இளம் நடிகை ராஷா ததானி அவரை சிறு வயதில் இருந்தே பார்த்து வருவதால் ஆன்ட்டி என அழைத்ததில் எந்தவொரு தவறும் இல்லை என்றும் தமன்னா ஆன்ட்டி தான் என்றும் பாலிவுட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஏற்கனவே தமன்னா பாட்டியா என்கிற பெயரை வைத்து அவரை நெட்டிசன்கள் தமன்னா பாட்டி என்றே கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தகது.


Click it and Unblock the Notifications











