என்ன இப்படி இறங்கிட்டாங்க...அயிட்டம் சாங்கிற்கு மாறும் டாப் நடிகைகள்
ஐதராபாத் : தெலுங்கு சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அயிட்டம் நம்பர் பாடல்கள் வருவது அதிகரிக்க துவங்கி விட்டது. அதிலும் பான் இந்தியன் படங்களில் அயிட்டம் சாங்கிற்கு ஆடுவதற்கு முன்னணி நடிகைகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அடுத்தடுத்து பல எதிர்ப்புகள் வந்தாலும் அயிட்டம் சாங்குகளின் எண்ணிக்கை மட்டும் குறையாமல் தொடர்ந்து கொண்டே உள்ளது. பிரபலமாக இருக்கும் நடிகைகளும் அயிட்டம் சாங்கிற்கு உடனே ஓகே சொல்லி விடுவதால் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை புக் செய்து வருகிறார்கள்.

சமந்தாவின் ஊ சொல்றியா மாமா
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் சமந்தா, திடீரென அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற அயிட்டம் சாங்கிற்கு ஆடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்த பாடல் மிகப் பெரிய ஹிட் ஆனது. இதற்கு ஆண்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், ஆண்கள் தான் அதிகம் இதை பார்த்து யூட்யூப்பில் செம ஹிட் ஆக்கினர்.

பின் தொடர்ந்த ரெஜினா
சமந்தா ஆடிய அயிட்டம் சாங் ஹிட் ஆனதால், அவரை தொடர்ந்து சிரஞ்சிவி நடித்த ஆச்சார்யா படத்தில் ரெஜினாவும் சானா கஷ்டம் பாடலுக்கு படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டார். இந்த பாடலின் வரிகளும் ஆண்களை இழிவுபடுத்துவதாக இருப்பதாக கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சமந்தா ஆடிய புஷ்பா பட பாடல் அளவிற்கு ஹிட் ஆகவில்லை என்றாலும் இந்த பாடல் பேசப்பட்டது.

இப்ப இவருமா
சமந்தா, ரெஜினாவை தொடர்ந்து அடுத்ததாக தமன்னாவும், வருண் தேஜ் நடிக்கும் கானி படத்தில் கொட்தே என்ற பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு, இணையத்தில் தீயாய் பரவி, ரசிகர்களை திணறடித்து வருகிறது. இந்த வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள தமன்னா, இந்த கேம் சேஞ்சிங் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

என்ன காரணம்
அடுத்தடுத்து விமர்சனங்கள், எதிர்ப்புகள் வந்த போதிலும் எதற்காக முன்னணி நடிகைகள் அயிட்டம் சாங் மீது ஆர்வம் காட்டி வருகிறார்கள் என காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர். புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சமந்தா ரூ.150 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. ஒரு பாடலுக்கே அதிக பணம் மற்றும் பாப்புலாரிட்டி கிடைப்பது தான் இதற்கு காரணமா எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











