சம்யுக்தா சண்முகநாதனின் இரண்டாவது கணவர் அனிருதா ஸ்ரீகாந்த் ஓகே.. அவருடைய முதல் கணவரை பார்த்திருக்கீங்களா?

சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதனுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் கடந்த வருடத்தில் திருமணம் நடந்தது. அவர்கள் இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு அவர்கள் ஜாலியாக வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென சம்யுக்தாவின் முதல் கணவருடைய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன.

சம்யுக்தா சண்முகநாதன் பொறியியல் பட்டத்தை பெற்றவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கின் மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனையடுத்து அந்தத் துறைக்குள் சென்று விளம்பர படங்களில் எல்லாம் நடித்தார். அங்கே அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. எப்படியாவது சினிமாவில் தனக்கான தனி இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று நினைத்து உழைக்க ஆரம்பித்தார்.

சினிமாவில் சம்யுக்தா: முதலில் சின்னத்திரையில் சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்த அவர் விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இவருக்கும் எதிர்பார்த்த பிரபல்யம் கிடைக்கவில்லை. அதனையடுத்து மை டியர் பூதம், காஃபி வித் காதல் படங்களில் நடித்த அவருக்கு; விஜய்க்கு அண்ணியாக வாரிசு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாரிசாவது பெரிய வெற்றியை பெறும் என்று பார்த்தால் அதுவும் தோல்விதான்.

After Second Marriage Samyuktha Shanmughnathan s Ex-Husband Photos Trend on Social Media
Photo Credit:

பிஸியான நடிகை: அவருக்கு பெரிய வெற்றி கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து நடிப்பதை விடவில்லை. அந்தவகையில் கடந்த வருடத்தில் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி என்ற படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். அதில் ஆனந்த்ராஜ், ஷகீலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருந்தாலும் படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. இன்னும் சில படங்களில் நடிப்பதற்கு கதைகள் கேட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை: இதற்கிடையே கார்த்திக் என்பவரை முதலில் திருமணம் செய்திருந்தார் சம்யுக்தா. அவர்களுக்கு ராயன் என்ற மகனும் இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. கார்த்திக்குடனான பிரிவுக்கு பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்தார். இரண்டு பேருக்கும் கடந்த வருடத்தில்தான் கோலாகலமாக திருமணம் நடந்தது. அனிருதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

முதல் கணவர் புகைப்படம்: இந்நிலையில் சம்யுக்தா சண்முகநாதனின் முதல் கணவர் கார்த்திக்கின் புகைப்படம் திடீரென சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அந்தப் புகைப்படங்களில் சம்யுக்தாவும் இருக்கிறார். முன்னதாக, கார்த்திக்கிற்கு கொரோனா காலகட்டத்தில் இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்தான்; சம்யுக்தா - கார்த்திக்கின் பிரிவுக்கு முழு காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் கார்த்திக் இப்போது துபாயில் இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X