சினேகா, சிம்ரன் எல்லாம் பார்த்தாச்சு.. அடுத்தது ஸ்ரேயா தான்.. ரெட்ரோ படத்தில் செம வைப் இருக்கு!
சென்னை: கோட் படத்தில் நடிகை சினேகா நடித்ததை பார்த்த ரசிகர்கள் வசீகரா காலத்துக்கே சென்று விட்டனர். வின்டேஜ் விரும்பிகளாக மாறியுள்ள ரசிகர்களின் பல்ஸை அறிந்துக் கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் தனது படங்களில் வின்டேஜ் பாடல்களை அடுக்கி வரும் நிலையில், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் ஒட்டுமொத்த பழைய பட ரெஃபரன்ஸ்களையும் வைத்தது மட்டுமின்றி சிம்ரனை ஒரு சீனுக்கு கொண்டு வந்து தியேட்டரை தெறிக்கவிட்டுவிட்டார்.
அஜித் குமாரே கதைப்படி இந்த சீனுக்கு நான் என் மகனையும் மனைவியையும் காப்பாற்ற விடாமுய்ற்சி அஜித் மாதிரி ஓடணும் என சொல்ல, அதெல்லாம் வேணாம் சார் சிம்ரன் மேடம் போன் பண்றாங்க வாலி பட நினைவுகளை எப்படி ரசிகர்களுக்கு கடத்துறோம்னு மட்டும் பாருங்க என ஆதிக் ரவிச்சந்திரன் பக்காவா பிளான் பண்ணி அடித்த அடி தியேட்டர்கள் எல்லாம் பிளாஸ்ட் ஆகிக் கொண்டிருக்கின்றன.

சினேகா, சிம்ரன், கோட் படத்தில் த்ரிஷா அப்படிப் போடு பாடலுக்கு நடனமாடியது என ஏகப்பட்ட ரெட்ரோ நினைவலைகளை ஒவ்வொரு இயக்குநர்களும் ரசிகர்களுக்கு கடத்தி வரும் நிலையில், ரெட்ரோ என்கிற டைட்டிலிலேயே படம் பண்ணி வரும் கார்த்திக் சுப்புராஜ் நடிகை ஸ்ரேயாவை அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வைத்துள்ளதாகவும் கூடிய சீக்கிரமே அந்த பாடல் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
ரெட்ரோ புரமோஷன் ஆரம்பம்: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இந்த ஆண்டு அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், கங்குவா தோல்விக்குப் பிறகு சூர்யா ரெட்ரோ மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் தமிழ்நாட்டிலும் பூஜா ஹெக்டே தெலுங்கிலும் இப்போதே புரமோஷனை தொடங்கி விட்டனர்.
ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த்: கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசியாக பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், கூடிய சீக்கிரம் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் எனக் கூறுகின்றனர். கங்குவா இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் வீடியோ மூலமாக பேசிய காட்சிகள் வெளியாகின. இந்நிலையில், ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினேகா, சிம்ரன், த்ரிஷா: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தில் சினேகா விஜய்க்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்திருந்தார். சொர்க்கமே என்றாலும் பாடலில் சினேகா நடித்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. கோட் படத்தில் மட்ட பாடலுக்கு த்ரிஷா அப்படிப் போடு பாடலுக்கு ஆடிய நடனத்தை மீண்டும் விஜய்யுடன் ஆடியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் என்ட்ரி தற்போது திரையரங்குகளில் ரசிகர்களை ரிப்பீட் மோடில் பார்க்க செய்து வருகிறது. மேலும், சிம்ரன் ஆடிய சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியர் நடனமாடியதும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
ஸ்ரேயா சம்பவம் சீக்கிரமே: இந்நிலையில், சூர்யாவின் ரெட்ரோ படத்தில் ஸ்ரேயாவின் சம்பவத்தை சீக்கிரமே ரசிகர்கள் பார்க்கப் போகின்றனர் என கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். கனிமா பாடலில் பூஜா ஹெக்டே நடனமாடியதை பார்த்தே ஏகப்பட்ட பெண்களும் பிரபலங்களும் சேலை கட்டி ரீல்ஸ் செய்து வரும் நிலையில், சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரேயாவின் கம்பேக் ரசிகர்களை வேறலெவலில் வைப் ஆக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











