ஸ்ரீலீலாவை தொடர்ந்து ஏஐ ஆபாச எடிட்டுக்கு எதிராக கொந்தளித்த நிவேதா தாமஸ்.. இதை எப்படி தடுப்பது?

சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டீப் ஃபேக் முறையில் ராஷ்மிகா மந்தனா வீடியோ வெளியான உடனே அவர் அதற்கு எதிராக குரல் கொடுத்தார். அமிதாப் பச்சன் உள்ளிட்ட டாப் பிரபலங்களும் அவருக்கு சப்போர்ட் செய்தனர்.

ஆனால், இந்த ஆபாச ஏஐ எடிட் பிரச்சனை அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து பூதாகரமாக சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீலீலா, சமந்தா, தமன்னா மட்டுமின்றி புதிதாக ஹீரோயின் ஆகியுள்ள சின்ன பொண்ணு சாரா அர்ஜுன் என பல நடிகைகளை பலி கடா ஆக்கியுள்ளது.

After Sreeleela Now Nivetha Thomas facing AI Abuse and she condemns it
Photo Credit:

க்ரோக் இமேஜின், நானோ பனானா என ஏகப்பட்ட ஏஐ தொழில்நுட்பம் ஆபாச எடிட்டுகளுக்கும் துணை போவது தான் நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது சினிமா நடிகைகளை தாண்டி நம்ம வீட்டு பெண்களையும் பாதிக்கும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சில விஷமவாதிகள் தொடர்ந்து ஏஐ மூலம் நடிகைகளின் ஆபாச புகைப்படங்களை உருவாக்கி காம இச்சையை தீர்த்தும் பரப்பியும் வருகின்றனர். இந்நிலையில், சேலை அணிந்து போட்டோ போட்ட நிவேதா தாமஸின் புகைப்படங்களையும் மோசமான ஏஐ வீடியோவாக மாற்றிய நிலையில், அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

ஸ்ரீலீலா டென்ஷன் ஆகிட்டாங்க: கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறேன், இது போன்ற ஏஐ நான்சென்ஸ் எடிட் எல்லாம் பண்ணாதீங்க என நடிகை ஸ்ரீலீலா தனது சமூக வலைதள பக்கத்தில் சற்று முன்னர் தான் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஏஐ தொழில்நுட்பத்தை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தாமல், கெட்ட விஷயத்துக்கு சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு பெண்ணும் ஒருத்தரின் பேத்தியாகவோ, மகளாகவோ, அக்கா, தங்கையாகவோ, தோழியாகவோ இருப்பார்கள். ஏன் இப்படி பண்றீங்க என பராசக்தி நடிகை பளார் விட்டு இருந்தார்.

நிவேதா தாமஸ் காட்டம்: இந்நிலையில், ஸ்ரீலீலாவை தொடர்ந்து நடிகை நிவேதா தாமஸ் தற்போது ஏஐ ஆபாச எடிட்டுகளுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். சேலை அணிந்து அவர் கவர்ச்சியாக வெளியிட்ட ஒரு போட்டோவை வைத்து ஏகப்பட்ட ஆபாச எடிட்டுகளை நெட்டிசன்கள் செய்துள்ளனர். மேலும், நிவேதா தாமஸ் சேலையை கழட்டி நிற்பது போன்ற ஏஐ வீடியோக்களையும் நெட்டிசன்கள் உருவாக்கி அதிகம் பரப்பி வரும் நிலையில், உடனடியாக அதை எல்லாம் நீக்கவில்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன் என நடிகை நிவேதா தாமஸ் எச்சரித்துள்ளார்.

அரசு கவனிக்குமா?: நடிகைகள் மட்டுமின்றி நடிகர்கள், பிரபலங்கள் என பலரது புகைப்படங்களை கிரியேட்டிவிட்டி என்கிற பெயரில் கண்டபடி எடிட் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஹீரோக்களையும், ஹீரோயின்களை வைத்து அவர்களுக்கு சம்பளமே கொடுக்காமல் ஆல்பம் பாடல்களை எல்லாம் உருவாக்கி ஏஐ கிரியேட்டர்கள் சம்பாதிக்கத் தொடங்கி விட்டனர். இன்னொரு பக்கம், நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் லீக் என டெரா பாக்ஸ் ஆபாச வீடியோக்களும் உலாவத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிரான நடவடிக்கையை அரசு எடுக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X