Trisha - விஜய்யோடு சேர்ந்த நேரம்.. த்ரிஷா எடுத்திருக்கும் முடிவு என்ன தெரியுமா?.. முழு விவரம் உள்ளே
சென்னை: Trisha (த்ரிஷா) பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் த்ரிஷா நடித்த சூழலில் த்ரிஷா ஒரு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக கூட்டத்தில் நிற்கும் ஒரு பெண்ணாக அறிமுகமான த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்ட த்ரிஷாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார்.

விஜய், த்ரிஷா: த்ரிஷா எத்தனை ஹீரோக்களுடன் ஜோடி போட்டாலும் விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்தபோது ரசிகர்களால் அந்த ஜோடி கொண்டாடப்பட்டது. கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என அவர்கள் இணைந்து நடித்த படங்களில் இருவருக்குமான கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடி கோலிவுட்டில் எவர்க்ரீன் ரீல் ஜோடி என்று புகழ்ந்தனர். முக்கியமாக கில்லி படத்தில் இருவரின் ஜோடியை இன்றுவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பல வருடங்களுக்கு பிறகு: இரண்டு பேரும் கடைசியாக குருவி படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படம் வெளியானது 2008ஆம் ஆண்டு. அதற்கு பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை. இந்த சூழலில் 15 வருடங்களுக்கு பிறகு விஜய்யும் த்ரிஷாவும் லியோ படத்தில் இணைந்து நடித்தனர். படமானது கடந்த மாதம் வெளியானது.
செம கெமிஸ்ட்ரி: லோகேஷ் கனகராஜின் இயக்கம் என்பதால் லியோ படத்துக்கு ஒருபக்கம் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தாலும் த்ரிஷாவும், விஜய்யும் பல வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு இன்னொரு காரணம். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஸ்க்ரீனில் ஜொலித்தது. முக்கியமாக இருவரும் கணவன், மனைவியாக நடித்ததை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினர். அதிலும் அந்த லிப் லாக் சீனை பார்த்த ரசிகர்கள் உருகிப்போயினர்.
த்ரிஷாவின் முடிவு: லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக சில பின்னடைவை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாஸ் காட்டி 600 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு த்ரிஷா ஒரு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி த்ரிஷா தனது சம்பளத்தை 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாய்வரை உயர்த்தியிருப்பதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.
விடாமுயற்சி: த்ரிஷா தற்போது கோலிவுட்டில் மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படங்களில் பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய மூன்று படங்களுமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. இதன் காரணமாக பிஸியாகியிருக்கும் அவர் அஜித் நடித்துவரும் விடாமுயற்சி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











