விஜய்யை தொடர்ந்து பூஜா ஹெக்டே போர்ஷனும் ஓவர்.. தளபதி பர்த்டேக்கு வெயிட்டான ட்ரீட் இருக்கு!
சென்னை: 34 வயதாகும் நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்தியா நடிகையாகவே வலம் வருகிறார். சூர்யாவின் ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே தமிழில் தளபதி விஜய்யுடன் இணைந்து ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அந்த படத்தில் தனது போர்ஷன் மொத்தமாக நிறைவடைந்து விட்டதாக போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி படத்தின் மூலம் 2012ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர், தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த பூஜா ஹெக்டே, ஹ்ரித்திக் ரோஷன் ஜோடியாக மொகஞ்சதாரோ படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார்.

பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த பூஜா ஹெக்டே, விஜய்யின் கடைசி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஹலமிதி ஹபிபோ: புட்ட பொம்மா என அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படத்தில் பூஜா ஹெக்டேவின் நடனத்தை பார்த்து கொண்டாடி வந்த ரசிகர்கள், ஹலமிதி ஹபிபோ பாடலுக்கு பிறகு அவரை அப்படியே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அனிருத் இசையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பெரிதாக கை கொடுக்கவில்லை என்றாலும், தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
விஜய் போர்ஷன் ஓவர்: கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார் என தகவல்கள் வெளியாக ரசிகர்கள் இதற்கு மேல் ஷூட்டிங்கில் தளபதியை பார்க்க முடியாதா? என ரொம்பவே ஃபீல் பண்ண ஆரம்பித்தனர். நடிகர் விஜய்யும் கடைசி நாள் படப்பிடிப்பின் போது ரொம்பவே எமோஷனலாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
பூஜா ஹெக்டே செம ஹேப்பி: எச். வினோத் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே, ஜன நாயகன் படத்தில் தனது போர்ஷன் முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். பூஜா ஹெக்டே ஜன நாயகன் பட அப்டேட் கொடுத்த நிலையில், #PoojaHegde ஹாஷ்டேக் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
ரெட்ரோவில் சூப்பர் நடிப்பு: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ படம் பூஜா ஹெக்டேவுக்கு நல்ல படமாகவே அமைந்தது. 2022ம் ஆண்டு வெளியான ராதே ஷ்யாம் படத்தில் இருந்து பல பெரிய படங்களில் நடித்து வந்தாலும் பூஜா ஹெக்டேவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தமிழில் பூஜா ஹெக்டே நடித்த முகமூடி மற்றும் பீஸ்ட் படங்கள் அவருக்கு சொதப்பிய நிலையில், நல்ல நடிகை என்கிற பெயரை ரெட்ரோ பெற்றுத் தந்தது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகன் படத்தின் மூலம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹீரோயினாகவும் மாற காத்திருக்கிறார்.
விஜய் பர்த்டே ட்ரீட்: வரும் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், கண்டிப்பாக ஜன நாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது ஏதாவது ஒரு க்ளிம்ப்ஸ் வெளியாகும் என தளபதி ரசிகர்கள் தயார் நிலையில், காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு ரஜினிகாந்தின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள பூஜா ஹெக்டே, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 படத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











