அதுக்குள்ள இன்னொரு கல்யாணமா?.. கார்த்திகா நாயர் வீட்டில் டும் டும் டும்.. காலில் விழுந்த மணமக்கள்!

சென்னை: நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர் கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி ரோகித் மேனன் என்பவரை கேரளாவில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின. இந்நிலையில், கார்த்திகா நாயர் வீட்டில் இன்னொரு திருமணம் அரங்கேறியிருக்கிறது.

நடிகை ராதாவுக்கு கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரு மகள்கள் உள்ளனர். அக்காவின் திருமணத்தில் ஆள் அடையாளமே தெரியாமல் பருமனாக மாறியிருந்த கடல் பட ஹீரோயினை பார்த்த பலரும் பாடி ஷேமிங் செய்து ட்ரோல் கமெண்ட்டுகளை போட ஆரம்பித்தனர். இந்நிலையில், கார்த்திகா நாயரின் தங்கைக்கு திருமணமா? என்றால் அதுதான் இல்லை. கார்த்திகா நாயர் புகுந்த வீட்டில் அவரது கணவரின் தம்பிக்கு திருமணம் ஆகி உள்ளது.

Again marriage in Karthika Nair house makes her very happy

கார்த்திகா நாயர் திருமணம்: நடிகைகள் அம்பிகா, ராதா சினிமாவில் கலக்கியது போல ராதாவின் மகள்களும் சினிமாவில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில படங்களுடன் இருவரும் சினிமாவை வெறுத்து விட்டனர். கார்த்திகா நாயர் ரோகித் மேனன் என்பவரை திருவனந்தபுரத்தில் உள்ள உதய் சமுத்ரா பீச் ஹோட்டலில் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். சிரஞ்சீவி, குஷ்பு, ராதிகா என பல சினிமா பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கார்த்திகா நாயர் வீட்டில் டும் டும் டும்: கார்த்திகா நாயர் புகுந்த வீட்டுக்கு போன சில மாதங்களிலேயே கார்த்திகா நாயர் கணவரின் தம்பிக்கு இன்று திருமணமாகி உள்ளது. முதல் மருமகளாக என் மகள் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்த நிலையில், தற்போது மூத்த மருமகளாக மாறிவிட்டார் என நடிகை ராதா தனது ட்விட்டர் பக்கத்தில் திருமண புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

கார்த்திகா நாயர் காலில் விழுந்து: வீட்டின் மூத்த மருமகளாக சென்றுள்ள கார்த்திகா நாயரின் காலில் மணமக்கள் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படத்தையும் நடிகை ராதா ஷேர் செய்து தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். சீக்கிரமே உங்க ரெண்டாவது பொண்ணு துளசிக்கும் திருமணம் செஞ்சிடுங்க என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X