90 எம் எல் ஸ்னீக் பீக்.. நீங்க அப்பவே சொன்னீங்க ஜூலி.. நாங்கதான் ஓவியா பத்தி நம்பல!

ஓவியாவின் 90 எம்எல் படத்தின் காட்சிகளை ஜூலி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

By Siva

Recommended Video

அபி வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜூலி | ஓவியாவை திட்டும் ஜூலி ரசிகர்கள்-

சென்னை: 90 எம் எல் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளைப் பார்த்து விட்டு ஓவியாவிற்கு எதிராகவும், ஜூலிக்கு ஆதரவாகவும் சிலர் சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் முதல் சீசன் மூலம் ஓவியாவைப் போலவே, ஆனால் எதிர்மறையாக பிரபலமானவர் ஜூலி. ஆனாலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு, தான் எதிர்பார்த்தது போல் சின்னத்திரை தொகுப்பாளினி, தமிழ்ப் படங்களில் ஹீரோயின் என பிஸியாகி விட்டார் அவர்.

பிக் பாஸ் இரண்டாவது சீசனே முடிவடைந்து விட்டபோதும், இன்னமும் ஓவியாவிற்கான ஆதரவும், ஜூலிக்கான எதிர்ப்பும் சமூகவலைதளப் பக்கங்களில் குறைந்தபாடில்லை.

90 எம்எல் டிரெய்லர்

90 எம்எல் டிரெய்லர்

ஜூலி தனது டிவிட்டர் பக்கத்தில் எந்தப் பதிவு வெளியிட்டாலும், அதற்காகவே காத்திருந்தது போல் கலாய்ப்பதற்கு என்று ஒரு கூட்டம் தயாராக இருக்கும். ஆனால், தற்போது இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஓவியா நடித்த 90 எம் எல் படத்தின் டீசர் மற்றும் டிரைய்லரில் இடம்பெற்ற வசனங்கள் மற்றும் ஆபாசக் காட்சிகளால் அவர் மீது மக்களிடையே கொஞ்சம் அதிருப்தி ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

90 எம்எல் ஸ்னீக் பீக்

90 எம்எல் ஸ்னீக் பீக்

இந்நிலையில், அனிதா உதீப் இயக்கியுள்ள இப்படம் வரும் மார்ச் ஒன்றாம் தேதி ரிலீசாக இருப்பதால், அப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், பிக் பாஸ் வீட்டில் கேமராவுக்கு முன்பு தான் பேசிய ‘வாழைப்பழம் போதும்' என்ற டயலாக்கை இரட்டை அர்த்தம் வரும் வகையில் ஓவியா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓவியா மீது காட்டம்

ஓவியா மீது காட்டம்

வழக்கம்போல இந்த ஸ்னீக் பீக் வீடியோவிற்கும் பலர் சமூகவலைதளங்களில் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஜூலியின் ரசிகர் போலும், பிராஷ் என்ற ஒருவர், ‘ஜூலிவின் டிவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் ஓவியா பற்றி காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஜூலி அப்பவே சொன்னார்

ஜூலி அப்பவே சொன்னார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரண்டு பதிவுகளில், "பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, ஜூலியைப் பார்த்து ஊர் காரித் துப்பும்னு ஓவியா சொன்னார். ஆனால், இப்போது அவரது 90 எம் எல் ஸ்னீக் பீக் பார்த்து ஊரே அவரைத் தான் காரித் துப்புகிறது. நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்.

இப்போ புரியுது

உங்கள (ஜூலியை) நெகட்டிவா காட்டணும்னே சுத்துறவங்கள மீறி நீங்க ஜெயிச்சு காட்டுங்க சகோதரி. வாழ்க்கை ஒரு வட்டம். அன்னைக்கு நீங்க ஓவியா பத்தி சொன்னது புரியல. இப்போ 90 எம் எல் டிரெய்லர் பாத்ததும் புரியுது. உங்க கணிப்பு மிகவும் சரி" என அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X